பக்கம்:Pari kathai-with commentary.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 27 - பதமலை நாடு என்பதும் கிரிந்து பிரான்மலைப்பக்கத்துப் புறமலே காடெனப் பட்டதோ என்று ஊகித்தலுமாம். 3. தேர் முல்லைக்கு ஈத்ததிறம். பாரி முல்லைக்குத் தேரித்தன னென்று முதன் முதல் வெளியிட்டவர் கபிலரேயாவர். அவர் இவ்வரலாற்றை விச்சிக்கோ முன்னரும் (புறம்-200.), இருங்கோ வேள் முன்னரும் (புறம்-201), புகழ்ந்து கூறினர். இவர் கூறி யது போற்றி இவ்வரலா றெடுத்தாண்டவர் சிறுபாணுறு பாடிய இடைக்கழிநாட்டு கல்லூர் நத்தத்தருைம், புறப் பொருள் வெண்பாமாலை பாடிய ஐயனரிதருைம், பழமொழி பாடிய முன்றுறை பறையனரும் ஆவர். கபிலர், - “ பூத்தலை யருஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கோள்கேனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி " (புறம்-200.) எனப் பாடியதன்கட் கொடிமுல்லை என்ற தல்ை இது செடிமுல்லையின் வேறெனத் தெரியலாயிற்று. இங்குப் ‘பாடாதாயினுங் கொ த்ெத' என்றதனுல் அதன் வருக்கம் பொருது உடனே அது படர்தற்குக் கொடுத்தான் எனப் பட்டது. கறங்குமணி நெடுக்தேர் கொடுத்த' என்றத ல்ை அத்தேரிலுள்ள விலையுயர்ந்த உறுப்புக்கள் எவையுங் கொள்ளாமற் கொடுத்தது கூறப்பட்டது. குதிரையுடன் ஈத்தானென யாண்டுங் கூருமையானும் அங்கனங் குதிரை யுடன் ஈத்தால் அது முல்லைக்கு உதவியதாகாமையானும் ' பண்பரிமாப் பூட்டுப் பறித்து' ஈத்தான் எனப்பட்டது. ஒரறிவுயிர்மாட்டும் அருளாற் செய்த கொடையாதலின் முந்துற வ்ைக்கப்பட்டது. தேர் கொள்கெனக் கொடுத்த பங்கோங்கு சிறப்பிற் பாரி' என்ற கல்ை இக்கெர்ன்டபே இவன் புகழ் படர்தற்குக் காரணமாதலுணர்க. இது நிகழ்த்தது மலைவழியிலென்பது குறுவியுறைக்கு காகநெடு ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/33&oldid=727977" இலிருந்து மீள்விக்கப்பட்டது