பக்கம்:Pari kathai-with commentary.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 271 யிரக்திம். எனக்கே - பாரிக்குத் தோழனகிய எனக்கே கடினென்று. கடப்பாடென. செம்மல் உளத்து - தலைமை உள்ளத்து. தலைமை - பன்னூலும் உணர்ந்த தலைமை. (28) 466. தீயிற் புகுதல் சிறிது கழித்தாக தாயிற் புரந்திவரைத் தாங்கவலேன்-மாயி னிவர்மாய்வ ரின்னே ருயிர்வாழ் வதற்கே யிவண்வாழ்வல் சின்னு னினி. (இ-ள்-)-சிறிது - சிறுகாலம். தாயின் - தாய்போல. தான் தந்தை யாதலினுக் தாயாதல் அரியது; அவ்வரிய விலையினின்று தாங்கவல்லேன் என்க. இவரென் மகளிர் " (புறம்-201) என்று கபிலர் கூறுதல் காண்க. மாயின் - தந்தை தோழனுகிய யான்மாயின். இவர் மாய்வர் என்றகளும் முன்மாயின் என்றதாயிற்று. இவண் வாழ் வல் - இவ்வுலகில் உயிர்வாழ்வேன். இவர் வாழ்வதற்கே வாழ்வல் என்றதனுற் றனக்கென வாழாமை குறித்தான். சின்னுள் வாழ்வல் என்றதல்ை இவர் பன்னுள் வாழ்வதனை வினைந்ததாம்: தாயின் என் நதி பெண்மக்களைப் பேணற்குத் தாய் சிறத்தல் பற்றி யெனினு மமையும். 467. சாத லேளிதே தரையிற் கடப்பாடென் முதல் புரிந்திருத்த லார்க்குமரி-தீது புரிவே னிவரைப் புறந்தந்து பின்ன ரேரிவாய் விழுகிற்பல் யான். (இ-ள்.)-சாதல் - சிறுபோது வருக்தி உடல் நீங்குதல் எளியதே யாம்; கடமைப் பாடென்று ஆவது புரிந்து அதனல் வரும் துன்ப மெல்லாம் உழந்து நெடுநாள் இருப்பதுதான் அரியது. ஈது - இவ்வரி யதை. புறந்தந்து - காத்து. பின்னர் என்றது யான் இவர்க்குஒன்று செய்யவேண்டாக பின்பு. (30) 468. உள்ளம் வலித்தா னுயிரைப் பொறியோடு மள்ளிப் பிடித்திங் கமைத்திட்டான்-வள்ளற்குப் பின்னே யவன்மகளிர்ப் பேணிப் புறந்தருத றன்னேர் கடனென்று தான். (இ-ள்.)-உள்ளம் வலித்தான் - மனத்தை உறுதி செய்தான். எரிவாய்ப் புகாமலும் புறம் போகற்குரிய பிராணன. ஐம்பொறி களோடும் சேர்த்துப்பிடித்து எ-று. உயிர் போம்போது ஐம்பொறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/368&oldid=728019" இலிருந்து மீள்விக்கப்பட்டது