பக்கம்:Pari kathai-with commentary.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 41 10. கையறவுரைத்த திறம். இதன்கண், பாரியின் அருமைத் துணைவியாகிய கற் புடையாட்டி நல்லாள், பாரியைப் பிரிந்திருத்தாள் என்ப தற்கு நூல்களில் யாண்டும் மேற்கோள் காணப்படாமை யானும், கபிலர் பாரிமகளிருடன் பாரி மனேவியையும் அழைத்துச் சென்ருரென்று கேட்கப்படாமையானும், பாரி மனேவி கல்லாள் என்னும் பெயர்க்கியையப் பாரியுடன் வான்புக்கனளென்று இத்திறத்திற் கூறப்பட்டது. 'பாவை . யன்ன நல்லோள் கணவன்......எங்கோ......வாாாச் சேட் புலம் புக்கனன் (பதிற்-61) என்று செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னுஞ் சேரன் முன்னின்று கபிலர் கூறுவ தும் இக்கருத்தை வலியுறுத்தும். ஈண்டு நல்லோள். கன வனுயிருந்தவன் ஆண்டும் கல்லோள் கணவனுகவே புக்க னன் என்பது கருத்தாகக் கொள்க. இதுவே. செங் தமிழ்ப் புலவர் கருத்தென்பது சயங்கொண்டார் தம்பரணி யில் 'தரைமகளுங் தன்கொழு லுடலக் தன்னைத் தாங்கா மற் றன்னுடலாம் ருங்கி விண்ணுட், டரமகளிரவ்வுயிரைப் புணரா முன்ன மாவியொக்க விடுவாளைக்.............. காண்மின்காண்மின்' என்று பாடுதலானவியலாம். புறப் பாட்டிற் பாரிமகளிருங் கபிலரும் பறம்பு விடுக்கும்போது பாடியன கையறு நிலையாகப் புறப்பாட்டுத் தொகுத்தோம் வரைந்து காட்டுதலான் இக்கையறவு பெரும்பாலும் அவர் பாலேவைத்துப் பாடப்பட்டது. கபிலர் பாடிய கைய அறு கிலையிற் சேறும்...காவிருங் கூந்தற் கிழவரைப்படர்ந்தே" என்று கூறுதலாம் படையெடுத்து வரும் வேந்தம் அவர்க்குக்கிழவராகாரென்பது கருதி அவரை மறைத்து. இரவினே கொண்டு பறம்புவிடுத்துப் போதல்.இத்திறத்தே குறிக்கப்பட்டது. 'இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின், யாமெந்தையு மிலமே' என்றது, இவர் இரவிற் சென்ரு. ரென்ற கருத்தை வலியுறுத்துதல் காண்க. இாவிற் சென்ற தற்குத்தலைமையாயகாரணம் பகைவேக்கர் தம்மைக் காணு மையேயாமென்று துணிக 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/47&oldid=728132" இலிருந்து மீள்விக்கப்பட்டது