பக்கம்:Pari kathai-with commentary.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 51 விடையான வழிபட்ட விழுத்தகைமுத்தையன் தவத்து கடையானே சிறந்துயரண் மைலகல் லாசேகேள். என்றபடி படைவலியானன்றிக் கொடைவலியா ன சாய புண்ணியசீலராவர். இப்பெரியார் செய்த அரிய பெரிய வித்யாதானத்தின் விளைவாகத், தில்லைத் திருப்பதி, முன்னேயிலுஞ் சிறந்து விசாலித்து, அறிவிலும் நாகரிகத்திலும் வளர்ந்து, பெரும் - புலவர் பலரைக் காப்பதன்றி ஊழி ஊழிக்கும் இயலினும் இசையினும் பலவகைக் கலையினும் பல்வகை மொழி யினும் எத்துணையோ புலவரை உண்டுபண்ணுவதாகவும் விளங்குதல் காணலாம். நிதிபெய்த தந்தையினும் நீள்புனல்பேய் தமையனினும் மதிபெய்த நின்கொடையான் வளர்ந்ததுசிற் றம்பலமே கதிபேய்த மதிவேணி நடராச னருள்பேருகத் துதிபெய்து கீழிே துலங்குவையண் ணுமலையே. என்று உலகம் வாழ்த்துவதல்லது இவர்கள் செய்த பெரு கல்லுதவிக்குக் கைம்மாறு காண்பது இயலாதாகும். இவ்வள்ளலார்க்கு என்னளவிற் செய்யுங் கைம் மாறு வேருென்றுங் காளுமையால் தமிழ்நாட்டுப் பண்டை கல்லிசைப்புலவர் பலரும் பரந்தோங்கு சிறப்பிற்பாடிய தெய்வப் பாரியின் கொடைச் சரிதத்தைத் தொடர்பெற வைத்து யான் இயற்றிய இந்நூலைக் கொடையொப்புமை கருதி மனமுவந்து உரிமையாக்கினேன். இவர்கள் அரும் பெருங் கொடையாற் கைப்பற்றிய புகழ்மாமகளுக்கு இப் பாரிகாதை ஒர் திலகமாக விளங்குவதாகுக. இவ்வரசர் பெருந்தகையார் எல்லா நலமு நிறைந்த கேடிதுழி யின்புற். வாழ இறைவன் திருவருளே வேண்டு கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/57&oldid=728193" இலிருந்து மீள்விக்கப்பட்டது