உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Sahadeva's Stratagem.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பூlசி. சகதேவன் சூழ்ச்சி (அங்கம்.1 கும் பொருட்டு ஒப்புக்கொண்டேன். ஆயினும் கண்ணன் அருளால் ஒன்று கூறினேன். இத்தேகம் நீரிற்குமிழி யாக்கையென கித்திய மில்லாததால், நீர் களபலிகொடுக் கும் பொழுது இத்தேகம் எனக்கிருக்குமாயின் எடுத்துக் கொள்ளும் என்றேன். ஆகவே இப்பொழுது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவர் காளைக்குத்தானே களபலி கொடுக்கப் போகிருர், மாமா வின் எண்ணப்படி நீங்கள் முக்கிக் கொள்வதானுல் உங்களுக்குச் சொந்தமாயிருக் கிறது. இந்த உடல், எடுத்துக் கொள்ளுங்கள்! அப்பா கண்மணி அா வானே !! அருகில்வா (அவனைச் சட்டியணைத்து உச்சிமுகர்ந்து) எங்கள் குலத்தை ஈடேற்ற வந்த அருஞ்செல்வமே ! நீ செய்த புண்ணியமே புண்ணி யம் ! நீ பெற்ற புகழே புகழ் வேறுயார் பெறுவார் இப் புவியில் சூர்ய குலத்துதித்த சிபிசக்கரவர்தி தன்னைச் சாணம் என்றடைந்த புரவிற்கே தன் உடலைக் கொடுக் தார், ேேயா ஜென்மத்துவேஷி என அறிந்தும், தேசி என்று கேட்டானே யென்று உன் தேகத்தைக் கொடுத் தாய் சந்திரகுலத்தை விளக்கவந்த சக்தியம் தவறச் தீபமே ! உன் கீர்த்தியானது உலகுள்ளளவும் நிலைத்தி ருக்குமாக ! நான் ஜெயித்தால் எவ்வளவு சந்தோஷ. மடைவேனே அதைப் பார்க்கிலும் பதின்மடங்கு சக் தோஷம் இன்று பெற்றேன் ! கிருஷ்ண மூர்த்தி என்ன சொல்லுகிறீர் ? நான் சொல்வது இனி என்ன இருக்கிறது? அாவான் தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டானே தர்மசங் கடத்தினின்றும் கப்பும் வழியையும் காட்டிவிட்டான். இருந்த போதிலும் அர்ஜுனனுடைய அபிப்பிராயத்தை நாம் அறியவேண்டியது அவசியமல்லவா ? கிருஷ்ணமூர்த்தி என் அபிப்பிராயம் என்பதென்ன, எல்லாம் தமது சித்தம் போல் நடக்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sahadeva%27s_Stratagem.pdf/38&oldid=729827" இலிருந்து மீள்விக்கப்பட்டது