பக்கம்:Saiva Nanneri.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 சம்பந்தர் முதலிய சைவ சமய அடியார்களே ப்பற்றி முதன் முதலாகப் பாடினர். அவ்வாறு சுந்தரரால் பாடப்பட்ட நூல் திருத்தொண்டத் தொகை யாகும். தமிழிலக்கிய வ ர லா ற் றி லே திருத்தொண்டத் தொகைக்கு ஒரு சிறந்த இடம் உண்டு. சுந்தரர்க்கு முன் ல்ை எந்தத் தமிழ்ப் புலவனும் தனக்கு முன்பு வாழ்ந்த புலவர்களேயோ அடியார்களையோ சுந்தரர் போலத் தொகுத்துப் பாடியதாகத் தெரியவில்லே. சைவப் பெரு மக்கள் தம் தலைமேலேற்றிப் போற்றிப் புகழ்ந்திடும் பக்திச் சுவை கனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட பெரிய புராணத்தின் தோற்றத்துக்குச் சுந்தரர் பாடிய இங்கத் திருத்தொண்டத் தொகையே காரணமாகும். அது மட்டு மன்று; பெரியபுராணத்துக்கு முன் தோன்றிய திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலுக்கும் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையே காரணமாகும். இத் துடன் சுந்தரர் நின்று விடவில்லை. சம்பந்தர், அப்பர், சாக்கிய நாயனர் முதலியவர்களையும் சுந்தரர் தமது தேனெழுகும் தேவாரப் பதிகங்களிலே குறிப்பிடுகிரு.ர். 'நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன் நாவினுக்கு அரையனளைப் போவானுங் கற்ற சூதன் நல்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள் குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு கின்குரை கழலடைந்தேன். சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகைக்கு மற் ருெரு சிறப்புண்டு. திருத்தொண்டத்தொகையில் பாடப் பட்ட நாயன்மார்கள் அனேரும் தமிழ் காட்டு மக்களாவர். மேலும் திருத் தொண்டத்தொகையிலே பதின்ைகு நாடு களையும், நூற்றைம்பத்தைந்து திருப்பதிகளையும் குறிப் பிடுகின்ருர் மற்றும் அண்ணுமலே, குமணமலை முதலிய மலேகளையும், காவிரி, அரிசிலாறு முதலிய ஆறுகளேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/100&oldid=729844" இலிருந்து மீள்விக்கப்பட்டது