பக்கம்:Saiva Nanneri.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சுந்தரர் குறிப்பிடுகிருர். இத்தகைய சிறப்பு மிக்க திருத் தொண்டத்தொகையினைத் திங்தமிழிலே யாத்துத்தந்த சந்தரர் திருநாவலுரரில் ஆதிசைவ பிராமண மரபில் சடை யஞர், இசைஞானியார், ஆகியோருக்கு மகனுகப் பிறந்து, நாடாளும் மன்னவன் நரசிங்க முனையாரது வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்து, அருமறை நூல்கள் பலகற்று அள வில் தொல்கலைகள் ஆய்ந்தார். ஆண்டுகள் பல உருண் டோடின. குழந்தை சுந்தரர் கொடிபடரும் ஒரு கொம் பாக மாறினர்; திருமணப் பருவம் எய்திர்ை. இவரது தங்தையார், சடங்கவி என்பவரது மகளே மருமக ளாக்க எண்ணினர். ஆனல் திருமண நாளன்று சிவபெரு மான் முதியவர் வடிவில் வந்து திருமணத்தை நடைபெருத வாறு செய்து, சுந்தரரைத் தடுத்தாட் கொண்டருளிர்ை. பின்னர் கந்தரர் கணிகையர் மரபில் வந்த பரவையாரை யும், வேளாளர் மரபில் வந்த சங்கிலியாரையும் திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் பற்றிச் சேக்கிழார் பெருமான், சுந்தரர் சிவனின் அணுக்கத் தொண்ட ரான ஆலால சுந்தரராவார்; பரவையாரும் சங்கிலியாரும் உமையின் பணிப் பெண்டிராவர்; ஆலாலசுந்தரர் கைலா யத்திலேயே இவ்விருவர் மீதும் அன்பு கொண்டார்: எனவே சிவல்ை மூவரும் மண்ணுலகத்திற்கு அனுப்பப் பட்டனர்” என்று தமது பெரிய புராணத்தில் கூறி யுள்ளார். - அப்பர், சம்பந்தர் போன்று இவரும் பல பதிகளுக் கும் சென்று இறைவனைப் பாடி மகிழ்ந்தார். முதலே புண்ட பாலன அழைத்தல், செங்கல்லேப் பொன் கல் லாகச் செய்தல், ஆற்றில் இட்ட பொருளேக் குளத்தில் எடுத்தல் போன்ற பல அற்புதங்களே இவர் திருவருளின் துஆனகொண்டு செய்து காட்டினர். இவரது பாடல்கள் நயங்கள் பலவற்றைக் கொண்டு விளங்குவதால், 'கயத் துக்குச் சுந்தரனர்" என இவர் பாராட்டப் பெறுகின்ருர், கல்வியின் பொருட்டுச் சிவபெருமான் இவரது கட்டைப் பெற்ருர் எனவும் அதன் காரணமாய் இவர் 'தம்பிரான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/101&oldid=729845" இலிருந்து மீள்விக்கப்பட்டது