பக்கம்:Saiva Nanneri.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f05 தேறுமின் சித்தம்: தெளிமின் சிவனே:

  • ... ". . . செறுமின் செற்றம் ஆறுமின் வேட்கை, அறுமின் அவலம் :

இவை நெறியா ஏறுமின்; வானம் இமையவர்க்கு விருந்தாய் இருமின்' என்று அறிவுறுத்தி வற்புறுத்துகின்ருர். ஒர் உவமை: பக்தி விஞ்சி அடியவர்கள் இறைவனே ச் சேரின் முக்தி யடைவர். இதற்குச் சேரமான் பெருமாள் அவர்கள் ஒர் அழகிய உவமையினேப் பயன்படுத்தியுள்ளார். காக்கை கருப்பு கிற்முடையது; இமயமலையோ பொன் னிறமானது. காக்கை இமயமலையை அடைந்தால், இம யத்தின் பொன்னிறச் சாயலில் தோய்ந்து அதுவும் கருமை மறைந்து பொன்னிறம் பெறும். இவ்வாறே இறைவனேச் சேர்ந்த அடியவரும் முத்திச் செல்வம் பெறுவர் என்கிருர் சேரமான். மாயான் மாமணி கண்டன் வளர் சடையார்க்கு அடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின யானை வளரும் கனக மலை யருகே - - போயின. காக்கையும் அன்றே --- படைத்தது அப் பொன் வண்ணமே.” இவர் திருவாரூர் மும்மணிக்கோவையை நம்பியாரூரர் கேட்கத் திருவாரூர் இறைவன் முன் அரங்கேற்றம் செய் தார். இதனை, திருமும்மணிக் கோவை நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்” என்று பக்திச் சுவ்ை கனி சொட்டச் சொட்டப் பர்டிய சேக்கிழார் கூறு மாற்ருல் அறியலாம். இம் மும்மணிக்கோவை முப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/110&oldid=729855" இலிருந்து மீள்விக்கப்பட்டது