பக்கம்:Saiva Nanneri.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. எனவே முதல் வர குணன் காலத்தில் சோழநாட்டின் பெரும்பகுதி டாண் டியன் கையிலேயே இருந்திருத்தல் வேண்டும். அதற் கேற்ப அக்காலப் பல்லவனை தந்திவர்மன் கல்வெட்டு ஒன்றேனும் சோழிகாட்டிற் காணப்படவில்லை. இவ்வாறு பல்லவனேயும் தோற்கடித்துச் சோனட்டைப் பிடித்தமை யால்தான்போலும், சின்னமனூர்ச் செப்பேடுகள் இரண் டாம் வரகுணனே விட முதல் வரகுணனே உயர்வாக மகா ராசன்' என்கின்றன போலும். நம்பியாண்டாரும் இவன் தன் உடல் வன்மையைச் சற்று மிகைபடக் கூறுகின் ருர், ஆல்ை இரண்டாம் வரகுணனே போரிற் பெருந்தோல்வி எய்திப் புறமுதுகிட்டோடியுள்ளான். இத்தகையவன் சோழ நாட்டில் நெடுநாள் தங்குவது எங்கே? திருப்பதி களே வணங்குவது எங்கே ? எனவே மணிவாசகர் குறிப் பிடுவது முதல் வரகுணனேயே என்க. முதல் வரகுணன் காலம் கி. பி. 793-835. எனவே அடிகள் காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதி என்பது தெளிவு. ஆல்ை மற்ருெரு ஐயமும் உள்ளது. சைவ நாயன்மார்க ளிலே மூவர்க்கு எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு சிறப்பு மணிவாசகருக்கும் உண்டு. அவ்வாறிருக்கப் பின் வந்த பெரிய புராணம் மணிவாசகரின் சிறப்பில் நூறிலும் ஆயிரத்திலும் ஒரு பங்குடைய அடியார்களே எல்லாம் குறிப்பிட்டுவிட்டு மணிவாசகரை மட்டிலும் குறிப்பிடா மல் விட்டதேன்? இதல்ைதான் போலும் டாக்டர் ரோச்ட் என்பவர் அடிகள் கி. பி. 13 அல்லது 14-ம் நூற் ருண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ருர் போலும். ஆல்ை சேக்கிழார் திருத்தொண்டத் தொகையில் கூறப் பட்டுள்ள நாயன்மார்களேயே பாடியுள்ளார் என்றும், அத் திருத்தொண்டத் தொகையைப் பாடியவராகிய சுந்த ரர் மானிக்கவாசகருக்கு முற்பட்டவர் ஆதலின் மாணிக்க வாசகரை அவர் தமது திருத்தொண்டத் தொகையில் சேர்க்கவில்லை என்றும் ஒரு சிலர் கூறுவர். இது முற்றி லும் பொருத்த முடைத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/116&oldid=729861" இலிருந்து மீள்விக்கப்பட்டது