பக்கம்:Saiva Nanneri.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 உணரும்படிச் செய்தார். இதற்குக் காழித் தாண்டவரா யர் எழுதிய வியாக்கியானம் உண்டு. மறைமலை அடிகள் முதல் நான்கு பாடல்களுக்கு உரை எழுதிய |ள்ளார். வேறு சில உரைகளும் வெளி வந்துள்ளன. திருவாசகம் 51 திருப் பதிகங்களாலாயது. இந்நூலின் பாடல் தொகை 9ே5 ஆகும். தித்திக்கும் திருவாசகத் தேனின் சுவையை உணர்ந்த வள்ளலார் இராமலிங்க அடிகள், வான் கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலங்து கால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப் பதுவே' என்று பாடியுள்ளார். பின்வரும் உண்மைகளே இந்நூல் உணர்த்துகின்றது. "மக்கட் பிறவி அடைவதற்கு அரியது. தெய்வம் ஒன்று உண்டு என்ற சித்தமுண்டாவது அதனி னும் அரி யது. மக்கள் யா. ஆம் வீட்டின்பம் பெறவிரும்பின், சிவ பெருமானே முதற் கடவுளாகக் கொண்டு வழிபாடாற்றல் வேண்டும். யாவரும் விட்டின்பம் பெறலாம். இறைவனி டத்து அன்பும், அடியார் கூட்டுறவும் கொள்ளுபவர் இறைவனது உண்மை இயல்பைத்தெளிய உணர்வர்.” i திருவாசத்தினுள் விளங்கும் சிறந்த பாடல் பகுதி களில் திருவெம்பாவை ஒன்ருகும். இயற்கை அழகும், மக ளிர் ஒருவரை யொருவர் எழுப்பிக் கொண்டே ரோடப் போகும் முறையும், அவர்கள் தமக்குள் ஏசிப் பேசிச் சொல்லும் முறையும் சுவை பயப்பனவாகும். பாவை நோன்பின் காரணமாக மங்கையர்கள் பாடும் முறையில் இது அமைந்துள்ளது. இது திருவண்ணுமலேயில் பாடப் பட்டதாகும். பாவை நூல்களில் இது தலே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மேகத்தை உமாதேவியாக உருவகப் படுத்திக் கூறும் பாடல் இன்பம் பயப்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/119&oldid=729864" இலிருந்து மீள்விக்கப்பட்டது