பக்கம்:Saiva Nanneri.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

“The Saiva Siddhanta represents the high water mark of Indian thought and Indian life.”

—Rev. W. Goudle; C. C. Magazine.

“Saivaism and Vaishnavism constitute the very life and soul of modern Hinduism.”

—Prof. Monder Williams.

சைவ சித்தாந்தம் சிறந்த தத்துவக் கருத்துக்களைக் கொண்டிலங்குகின்றது; வேறு எந்தச் சமயத்திலும் அவ்வாறில்லை. சைவ சமயம் மிக்க தொன்மை வாய்ந்தது; சிறப்பு வாய்ந்தது. சைவ சித்தாந்தம் தமிழர்க்கே உரியது; தனித்து இயங்கும் தன்மையது; அனைவராலும் கற்றற்குரியது. இந்திய மக்களின் சிறந்த எண்ணங்களுக்கும் வாழ்க்கை நெறிக்கும் ஓர் எடுத்துக்காட்டாக, கலங்கரை விளக்கமாக இலங்குகின்றது.

—W. கௌடி.

தற்கால இந்து சமயத்தின் இரு கண்களாகச் சைவமும் வைணவமும் விளங்குகின்றன: உயிர்நாடியெனினும் அது மிகையாகாது.

—பேராசிரியர் மானியர் வில்லியம்சு.

“A System which perhaps from the theistic point of view is the most valuable of all that have sprung up upon the Indian soil.”

—Rev. N. Macnicol; Indian Theism.

இந்தியச் சமயங்களில் சைவ சமயம் ஒன்றே கடவுட் தத்துவத்தைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறுகிறது. எனவே இது மிகச் சிறந்த சமயமாகக் கருதப்படுகின்றது.

—என். மாக்னிக்கால்.

“No cult in the world has produced a richer devotional literature or one more instinct with brilliance of imagination, fervour of feeling and grace of expression.”

—Dr. L. D. Barnett; Heart of India.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/12&oldid=1404678" இலிருந்து மீள்விக்கப்பட்டது