பக்கம்:Saiva Nanneri.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அடிகளார் இயற்றிய மற்ருெரு நூலாகிய திருச்சிற் றம்பலக் கோவையார் என்னும் திருக்கோவையார் சிற்றின் பச் சுவை பயக்கும் முறையில் அகப்பொருள் இலக்கணப் படி பாடப்பட்டிருப்பினும், பேரின்பப் பொருளேயே அது தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது என்று கூற வேண்டும். 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சிவபெருமான் மணிவாசகரைப்பணிக்க, அவரும் அந்நூலைப் பாடியருளினர் என்று பெரியோர் சொல்லு வர். பேராசிரியர் இந்நூலுக்குச் சிறந்த உரையொன்று எழுதி உள்ளார். இந்நூலின் சிறப்பை திருக்கோவையார் உண்மை என்னும் நூல் நன்கு எடுத்துக் கூறும். சுருங் கக் கூறின் கோவை நூல்களிலே வாக்காலும் போக்காலும் தொன்மையாலும் மிகச் சிறந்து விளங்குவது திருக்கோவை யாரே ஆகும். அந் நூலில் தில்லைக் கூத்தன் தலைவகைப் பரவப் படுகின்ருன். அதனல் அவனது திருவருட் சிறப் பும் தில்லையம்பலத்துப் பெருமாண்பும் ஒவ்வொரு பாட் டிலும் சிறப்பிக்கப்படுகின்றன. இதற்கு நூற்பா யாப்பில் மற்றுமொரு உரை உண்டு. - - மணிவாசகரின் உள்ளத்திறன் ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலாய தேனினைச் சொரிங் திடும் திருவாசகத்திலே காணப்படும் சிறந்த பகுதிகளிலே ஒன்று திருச்சதகம். இந்நூலிலே மணிவாசகப் பெருங்தகையானவர் தான் உண்ணுமல் உறங் காமல் அல்லும் எல்லும் ஆண்டவனின் பேரருளிலும் அன் பிலும் கினைந்து கினேந்து, உருகி உருகி, ருெக்கு ருெக்காடித் தன்னே மறந்து, உலகை மறந்து வாழ்ந்த காலம் கண்ட சைவ உண்மைகள் பலவற்றைப் பொன்னே ப்ோலப் பொதிந்து வைத்துப் பாடியுள்ளார். - உடல் வாதனேக்கு ஆட்பட்ட ஆன்மா மலமாசுண்ணு. கிறது. இவ்வுலகமே ஆன்மாவின் மல க்ேகத்துக்காகப் படைக்கப்பட்டதே என்பது பேரறிஞர் சிலர் கருத்தாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/120&oldid=729866" இலிருந்து மீள்விக்கப்பட்டது