பக்கம்:Saiva Nanneri.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ஆன வெம்போரிற் குறுந்துாறெனப் புலனல் அரிப்புண டேனே எந்தாய் விட்டிடுதி கண்டாய்." எறும்பிடை காங்கூழ்ப் புழுவெனப் புலல்ை -- அரிப்புண்ட வெறுங் தமியேனை விட்டிடுதி கண்டாய்.” இவ்வாறு புலன்களில்ை அடிமையாக்கப்பட்ட பொழுது ஆண்டவனே வந்து தடுப்பினும் தன்னல் புலன்களி லிருந்து விடுபடல் அரிது என்கிருர் அடிகள். இதுகாறும் கூறியவற்ருல் அடிகளின் உள்ளம் உலகப் பற்றுக்களையும், அப்பற்றுக்களில்ை உண்டாகும் இன்பங்களையும், அவற்றுக்குக் காரணமான பொறி புல்ன் களையும், வெறுத்த உள்ளம் என்பதும், அல்லும் எல்லும் கனவும் கனவும் உண்ணுது உறங்காது இறைவன்றன் அருளாரமுதப் பெருங் கடலிலே திளைத்தாட விழைகின்ற அருள் உள்ளமாம் என்பதும் புலகுைம். மனித உள்ளத்து எழுகின்ற உணர்வுகள் மிகப்பல. அவற்றுள் சிறந்தன. இரண்டு. ஒன்று இன்ப உணர்வு: மற்ருென்று துன்ப உணர்வு. இந்த இரண்டு உணர்வு களிலே உள்ளத்தின் திறனையும் உண்மையான இயல் பினேயும் தெள்ளத் தெளியக் காட்டவல்லது துன்ப வுனர்வே. இன்பியல் நாடகத்தை விடத் (Comedy) துன்பியல் (Tragedy) 5ாடகம் சிறந்திருப்பதற்குக் காr ணம் இதுவே. இத்தகைய் இரண்டு உணர்வுகளிலே திருச் சதகம் என்பது இன் பவுணர்வின் கொள்கலம். ந்ேதல் விண்ணப்பமோ துன்பவுணர்வின் கொள்கலம். மணிவாசகரின் மாண்பினைப் பண்டி தமணி மு. கதி ரேசச் செட்டியார், ' இவர் மேற்கொண்ட நெறி, சரியை, கிரியை, யோகங்களுக்கு மேலான ஞானநெறியாகிய சன்மார்க்கமாகும். இந்நெறியில் கின்ற அடிகள், காணப் படும் இவ்வுலக இயல்புகளைத் தம் கூர்த்த மதியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/124&oldid=729870" இலிருந்து மீள்விக்கப்பட்டது