பக்கம்:Saiva Nanneri.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 உய்த்துணர்ந்து. பருப்பொருளாகிய மாயா காரியங்களெல் லாம் தத்தங் கால எல்லேயில் அழிந்தழிந்து தேய்ந்தொழி வன என்னும் உண்மையையும், இவ்வெல்லாவற்றையும் கன்மங்களுக்கீடாகப் படைத்தும், காத்தும் கரந்தும் விளை யாடும் பேராற்றல் வாய்ந்து கால எல்லையைக் கடந்து நிற்கும் கடவுள் ஒருவருளர் என்பதையும், அப்பெருமான் சார்ந்தார்க்குத் தண்ணிழலாய்ப் பேரின்ப வடிவாகத் திகழும் இயல்பினர் என்பதையும் உள்ளவாறுணர்ந்து அப்பெரும் பெயர்க் கடவுள் உபதேசத்தால், தாம் எய்திய பேரானந்தப் பெருஞ் செல்வத்தைத் தம் சோதரராகிய மக்கள் எல்லோரும் துய்க்க வேண்டும் என்னும் பேரரு ளுடையராய்த் திருவாசகம் என்னும் தெளிதேனைப் பொழியும் அருள் முகிலாயினர் ” என்று பாராட்டி யுளளாா. அடிகளார் இயற்றிய திருவாசகம் இம்மை உடல் வாழ்வு, பண்டைய உடல் வாழ்வு ஆகிய இருவகை வாழ்வு களேத் திறம்பட எடுத்துக்காட்டுகின்றது. பண்டைய வாழ்வைச் சிவபுராணத்திலும், திருவம்மானேயிலும் c5 TGNUT GUITLD. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன் எம்பெருமான்' -சிவபுராணம். ஆணையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறங் தெய்த்தேனே : -திரு அம்மானை. இம்மை வாழ்வைத் தன் தாய் வயிற்றிற் கருக்கொண் ப.து முதல் தொடங்கிப் போற்றித் திருவகவலில் கூறுகின் முர், தாய் வயிற்றில் இருந்தகிலே , பிறந்து உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/125&oldid=729871" இலிருந்து மீள்விக்கப்பட்டது