பக்கம்:Saiva Nanneri.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மெய்ப் பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலபேருய் எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருள் நம் சிவனேயாம் : என்று தெளிந்ததையும் அவர் எடுத்து ஒதுகின்ருர் பின் நன்றியைப் புலப்படுத்துகின்ருர். இதனை அடிகள் பாடு தற்குக் கொண்ட நெறி மிக்க புதுமையானது. மகளிர் விளையாடும் அம்மனையாடல், தும்பியூதல், சாமுலாடுதல் முதலிய விளையாட்டுப் பாட்டுக்களாகச் சிறுமகளிர் கூற் றில் வைத்துத் தேன்சொட்டப் பாடியுள்ளார். அருட் குரவனுக வந்து இறைவன் அருளிய ஞானவுணர்வு மிக மிக அடிகட்கு வீடுபேற்றின்கண் பேரார்வம் உண்டாகி விடுகிறது. எனவே இறைவனே விடு நல்க வேண்டுகிருர். எம்பெருமானே, உடைந்து நைந்து உருகி உன்திருமலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்.' I வீடு பேற்றின்கண் ஆர்வம் மிக்கவர் தம் கருவி கரி னங்களை இறைவன்பால் உரிமை செய்து அவற்றின் செயலே இறைவனுடையதாகக் கையடைப்படுத்துவர். அதனைச் சமய நூல்கள் இறைபணிகிற்றல் என்று கூறும். அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும் குன்றே யனையாய் என ஆட் கொண்டபோதே கொண்டிலையோ.: இவ்வாறு பசு கரணங்களெல்லாம் பதிகரணமாக வசி பெறும். சான்ருேர் பிறவித்துயர்க்கு அஞ்சுவதிலர். எனவேதான் அடிகளார் மனித்தப் பிறவியும் வேண்டு வதே ' என்று கூறுகிருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/127&oldid=729873" இலிருந்து மீள்விக்கப்பட்டது