பக்கம்:Saiva Nanneri.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 மட்டும் மேற்கொள்ளவில்லை; அறிவுத்துறையிலும், ஆன்!!! வாழ்விலும் இவ்விதமே மனிதன்முயன்றுள்ளான். முப்பத் தெண்ணுயிரம் திருப்பதிகங்களைக் கண்டு மருண்ட தமிழ் மகன் அவற்றிலே சிறந்தன எனத் தான் கருதிய இருபக் தைந்து பதிகங்களை எடுத்துத் திரட்டிப் பாடிப் பரமன் முேல் சேர்ந்தான். ஆன்ம வாழ்விலே மனிதன் கொண் . முயற்சிச் சுருக்கத்தின் அடையாளமே அகத்தியர் தேவா ரத்திரட்டு எனின் அது பொருத்தமுடைத்தாகும். நூலின் அமைப்பு அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும், குரு உருவம், திரு றுே. ஐந்தெழுத்து, கோயிற்றிறம், அரன் உருவம், திரு வடி, அர்ச்சனை, தொண்டு ஆகிய எட்டுப் பொருளின் உண் மைகளையும் தன்மைகளையும் சிறப்புக்களேயும் அமைத்துப் பாடிய பாக்கள் பல தேவாரத்திலே காணப்படுகின்றன. அவற்றிலே சிறந்தவை எனத் தாம் கருதிய பாக்களே எடுத் துத் தொடுத்து உலகிற்கு ஒர் அருமைச் செல்வர் கந்த தேவாரத்திரட்டே அகத்தியர் தேவாரத்திரட்டு ஆகும். இந்நூலில் கானும் இருபத்தைந்து பதிகங்களிலே குரு வருள் பற்றிய பதிகங்கள் மூன்று. அவை சம்பந்தர், ஆப் பர். சுந்தர்ர் ஆகிய மூவராலும் பாடப்பட்டவை. இரு வெண்ணிற்றுக்குச் சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று மட் டுமே உள்ளது. பஞ்சாக்கரம் பற்றிய பதிகங்கள் நான்கு. அவ்ற்றிலே சம்பந்தருடையது இரண்டு: அப்பருடையது ஒன்று; சுந்தரர் பாடியது ஒன்று. கோயிற்றிறத்துக்கு மூன்று பதிகங்கள். அவை சம்பந்தர் முதலிய மூவரும் பாடியவை. சிவனுருவம் பற்றிய பதிகங்கள் ஐந்து. ஐங் திலே சம்பந்தர் பாடியவை இரண்டு; அப்பர் யாத்தவை இரண்டு; சுந்தரர் தொடுத்தது ஒன்று. சிவன்றன் திரு வடிப் பதிகங்கள் மூன்று. இவற்றில்ே மூவர் தேவாரப் பதிகங்களும் உண்டு. அர்ச்சனே. தொண்டு ஆகிய இரண் டிலும் ஒவ்வொன்றுக்கும் மும்மூன்று பதிகங்கள் உள. i ஒவ்வொரு பொருள் பற்றிய பதிகங்களிலும் மூவர் திருப் சை-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/134&oldid=729881" இலிருந்து மீள்விக்கப்பட்டது