பக்கம்:Saiva Nanneri.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பாடுகளையும், பிற சமயத்தவ்ரும் அறிவியலறிஞர்களும் கண்டுகொள்ள இயலாத அரிய பெரிய உண்மைகளேயும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. இறைவல்ை அருளிச் செய்யப்பெற்ற ஆகமங்களையும், அருளாளர்கள் அன்புடன் அளித்த பன்னிரு திருமுறைகளையும், பதி ன்ைகு சாத்திரங்களையும் கொண்டு இலங்கும் இச்சமயம் ஆல்போல் செழித்து அருகுபோல் பரவியுள்ளது. தோற்றமும் வளர்ச்சியும் முன்னர்க் கூ றி ய ப டி சைவ சமயம் மிகவும் தொன்மை வாய்ந்தது; தனித்த ஒரு மனிதரால் தோற்று விக்கப் பெருதது. எனவே இதனது தோற்றம் குறித்து ஒன்றும் தெளிவாகக் கூறுவதற்கில்லை. சைவ சமயத்தின் முழுமுதற் பொருளே முதலில் மக்கள் இலிங்க வடிவமாக வழிபட்டனரென்று தெரிகிறது. இவ்விலிங்க வணக்கம் தின் தோற்றத்துக்குக் கூறப்படும் விளக்கங்கள் மிகப் பலவாகும். விளக்கங் கூறியவர்கள் ஒவ்வொருவரும் வெவ். வேறு விளக்கம் கூறுகின்றனர். ஒத்த இரண்டு விளக் கங்கள் காண்டல் முயற்கொம்பாகக் காணப்படுகிறது. "பாம்பு வணக்கம்” எனப் பெயரிய நூல் யாத்த திரு. ன்ே. அவர்கள் ஞாயிறு வணக்கத்தினின்று இலிங்க வணக்கம் தோன்றியிருக்கலாம் என்கிருர். அதற்கு அவர் கூம்பு வடி வான பிரமிடுக் கோபுரங்களைச் சான்ருகக் காட்டுகிருர், திரு. வெத்ராப் என்பவர் மக்கள் தோற்றத்தை விளக்கும். குறியாக இலிங்க உருவத்தை ஏற்படுத்தி அதனே வழிபட் டனர் என்பர். இலிங்க வணக்கம் பற்றி ஆராய்ந்த அறி ஞர் பெருமக்கள் அது உலகின் பல பாகங்களிலும் பரவி யிருந்த ஒரு சிறந்த வணக்கமாகும் என்று கூறியுள்ளனர். எகிப்தியரும் உரோமரும் கிரேக்கரும் இலிங்கத்திற்குக் கோயில் கட்டி வழிபட்டனராம். திரு. முக்கர்சி என்பவர் தாம் எழுதிய இந்திய நாகரிகமும் பழமையும்" என்ற நூலில் இலிங்க வணக்கம் பற்றிக் கூறும் கருத்துக்கள். உளங்கொளற்குரியன. அவை வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/14&oldid=729887" இலிருந்து மீள்விக்கப்பட்டது