பக்கம்:Saiva Nanneri.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13? உருவங் கற்பித்து அதனைப் பலபடியாகப் பாராட்டி வணங்கியுள்ளார்கள், வணங்கி வருகின்றனர். அத ைச் சைவ இலக்கியங்களிலே காணப்பெறும் சிவன் றன் .(, வத்தைப் பற்றிக் கூறும் பல்வேறு குறிப்புக்களால் அறிய லாம். விண்ணிற்குத்தாவும் கங்கை, பிறைமதி, இவற் றைத் தாங்கி கிற்கும் பொன்னே வெல்லும் செஞ்சடை, கண்ணுதல், அருள் பழுத்தொழுகும் திருமுகம், தோடு டைய செவி, கறைமிடறு, கரித்தோல் போர்த்த செம் மேனி, சூலமேந்திய கரம், பெண்கூறு, அரையிலே புலி க் தோல் கோவணம், காலிலே கழல், திருவடி உடம்பிலே நெளிந்து வளைந்து ஒளிரும் பாம்புகள், வெள்விடை ஆகி யவை பற்றியும், அணியும் மாலேகள் பற்றியும் ஏராளமான குறிப்புக்கள் சைவத்திருமுறைகளிலே காணப்படுகின்

  • _.

றன. அவற்றுள் ஞான சம்பந்தர் சிவனுருவம் பற்றி வழங் கிய குறிப்புகளுட்சில வருமாறு:- - ' கங்கை சடையிற் கரந்தார்; பிறை கின்றிலங்கு சடையாரவர் எம்பெருமா ன டிகளே கரிய மிடறுமு ை... யார், மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலைென்றேந்தி: துள்ளு மிளமான் மறியார் விரிதோடு ஒரு காதிலங்க; செங்கண் வெள்ளேறு ஏறிச் செல்வார்.' இனித் திருநாவுக்கரசர் திட்டிய சிவனுர்தம் திருவுரு வம் பற்றிய ஒரு பாடல் வருமாறு: வடிவேறு திரிகுலங்தோன்றும் தோன்றும் வளர்சடைமே விளமதியம் தோன்றும் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும் மிடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழுந்திரு முடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் - பொழில் திகழும் எம்பூவணத்தெம்.புனிதர்ைக்கே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/142&oldid=729890" இலிருந்து மீள்விக்கப்பட்டது