பக்கம்:Saiva Nanneri.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 தேங்கமழ் சோலைத் தென்னருர்த் திருமூலட்டாணன் βΤ ΜΕ/ ΕΕ θΥΓ பூங்கழலான் அடித்தொண்டர்க்குத் தொண்ட ராம் . புண்ணியமே.” சுங்தரர் தாம் பாடிய திருத் தொண்டத் தொகையிலே தனியடியார் அறுபத்து மூவரையும் தொகையடியார் ஒன் பதின்மரையும் கூறி அவர்க்குத் தாம் அடிமை செய்யக் கடப்பாடுடையேன் என்று பாடியுள்ளார். திருகின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கு மடியேன் ’’ : இல்லையே என்னத இயற்பகைக்கு மடியேன். ' பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்.' அத்வைதம் தென்னகத்திலே கிலவும் சமயங்களுள் அத்வைத சமயமும் ஒன்று. உலகமும் பிரமமும் ஒன்று என்பது இச்சமயத்தின் உயிர்காடி. இச் சமயத்தைத் தோற்று வித்தவர் காலடியிம் பிறந்த சங்கரராவார். இவர் காலம் கி. பி. எட்டாம் நூற்ருண்டாகும். மெய் வாய் கண் மூக்குச் செவி ஆகிய ஐந்து பொறிகளாலும் நாம் உலகி டைக் கானும் பொருள்கள் உண்மையானவை அல்ல : அவையெல்லாம் பொறிகளின் மருட்சியால் தோன்றுபவை. நம் கண்களுக்குத் தெரிந்த உலகத்திலும், சிங்தையும் மொழியும் செல்லா உலகங்களிலும் பரவி, உயிருக்குள் உயிராய் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒன்றே பிரமம் எனப்படும். சொல்லளவில் அந்தப் பிரமம் வேறு உல கம் வேறு என்று தோன்றலாம். ஆனல் உலகத்துக்கு ஆதாரம் பிரமங்தான். ஆதலால் உலகமும் பிரமமும் வேறு வேறு அல்ல. இந்த இரண்டும் அற்ற கிலேயே வடமொழி யில் அத்வைதம் எனப்படும். பிரமம் உலகமாகக் காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/148&oldid=729896" இலிருந்து மீள்விக்கப்பட்டது