பக்கம்:Saiva Nanneri.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 என அறிஞர் கூறுவர். உயிர் இறைவனே அடைய வேண் டுமானல் முதலிற் குருவிடம் பயிறல் வேண்டும். தனக் கும் உலகிடைக் காணப்படும் பொருள்கட்கும் உள்ள தொடர்பு என்ன என்பது போன்ற உண்மைகளைக் குரு வின் வாயிலாக அறிதல் முதனிலை ஆம். இங்ங்னம் குரு விடம் அறிந்த உண்மைகளைத் தன் அன்ருட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அறிதல் வேண்டும். இதுவே கினைத்துப் பார்த்தல் என்னும் இரண்டாம் கிலே யாகும். குருவின் வாயிலாக இறைவனைப் பற்றிக் கேட்ட உண்மைகளே அன்ருட வாழ்வில் அனுபவித்த மனிதன் தனது தியானத்தின் வாயிலாகத் தெளிவாக அறிகிருன். இந்த கிலேயில் அவன் பிரமத்தை உணர்வதோடு தானே பிரமமாகவும் ஆகின்ருன். இந்த நிலையை அடைபவனே சீவன் முத்தன் எனப்படுகின்ருன். இவனை எல்லாப் பற் றுக்களினின்றும் விடுபட்ட மனிதன் என்றும் கூறலாம். இவனது ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்ததும் இறைவைேடு கலந்து விடுகிறது. மனித வாழ்வு நீரோட்டம் உள்ள ஆற்றுநீர்க் குமிழியை ஒக்கும். குமிழியும் ர்ேதான் : ஒடும் ஆற்றிலும் அதே நீர்தான் இருக்கிறது. அதே போன்று சிவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இதுவே அத்வைதத்தின் உயிர்க்கொள்கை. இந்த அத்வைதத் கக் கவம் ஏகான்ம வாதம் என்றும் கூறப்படும். ഞ8-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/150&oldid=729899" இலிருந்து மீள்விக்கப்பட்டது