பக்கம்:Saiva Nanneri.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சைவனே. இவனது சகோதரிகளாகிய குந்தவ்வை, மது ராந்தகி என்போர் தில்லையில் பற்றுக் கொண்டவராகிப் பணி பல ஆற்றினர். இவனது மகன் விக்கிரமனும் சிறந்த சிவ பக்தனே. இவன் தில்லைக் கோயிலைப் பொன்வேய்ந்து அழகு படுத்தினன், தில்லைக்கோயில் தேருக்கும் பொன் வேய்ந்து முத்துவடம் அளித்தான். பொன் கலன்களும், பொன் கற்பகத் தருவும் கொடுத்தான். இவனது பெயரால் சிதம்பரத்தில் வீதி ஒன்று உண்டு. தில்லே, காட்டுமன்னர் கோயில் ஆகிய இடங்களில் அரச மாளிகைகள் இவன் காலத்தில் இருந்தன. ஒட்டக்கூத்தர் இவனது அவைக் களப் புலவராவார். இவனது மகன் இரண்டாம் குலோத் துங்கன் ஆவான். இவனும் தன் முன்ைேரைப் போலத் தில்லேயின் புகழைத் திக்கெலாம் பரவச் செய்தான் தில்லே நகரில் பெரும் வீதிகளே அமைத்தான்; எழு கிலேக் கோபு ரம் எடுப்பித்தான்: பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான்; சிவகாமி கோட்டம் அமைத்தான் குளம் வெட்டின்ை: கோயிலுக்குத் தேர் செய்துகொடுத்தான்; பசு, யானே, எருது முதலியவற்றை வழங்கின்ை. இவன் ஒட்டக் கூத் தரிடம் பெருமதிப்புடையவன். இவன் தில்லையில் நெடுங் காலம் தங்கி இருந்தனன். இவனது மகனுகிய இரண்டாம் இராச ராசன்(11461163) தன் தந்தையைப் போன்றே தில்லைக்குத் திருப் பணிகள் பல செய்தான். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசு ரத்தில் இவன் இராச ராசேச்சுரம்' என்ற கோயிலேக் கட்டுவித்தான். அதன் பெயரே நாளடைவில் தாராசுரம் என மருவிற்று. இவனது அவைக்களப் புல வரும் ஒட்டக் கூத்தரே. இவனுக்குப் பின் விக்கிரமனது பேரன் இரண்டாம் இராசாதிராசன் பட்டமேறின்ை. அவனுக்குப் பின்னர் மூன்ரும் குலோத்துங்கன் (11781318) பட்டமேறினன். இவன் இரண்டாம் இராச ராச ளிைன் மகன் ஆவான் இவனும் முன்னேர் போலச் சிவ பக்தனுக விளங்கின்ை. இவனுக்கு இறைவன் 'கம் ,ே rழன்' என்ற பெயரை வழங்கின்ை என்று திருவாரூர்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/155&oldid=729904" இலிருந்து மீள்விக்கப்பட்டது