பக்கம்:Saiva Nanneri.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 கல்வெட்டொன்று கூறும். இவன் பல திருக்கோயில்களேக் கட்டுவித்தான். இவன் திரிபுவனன்’ என்னும் தனது சிறப்புப் பெயரால் திருவிடைமருதுார்ப் பக்கத்தில் திரி புவன வீரேச்சுரம் என்னும் கோயிலேக் கட்டுவித்தான். தில்லையில் பொன் வேய்ங்தான். பாண்டிய மன்னன் குல சேகரனே வெற்றிகெர்ண்டபொழுது, இம்மன்னன் மது ரையில் தங்கியிருந்தனன். அதுகால் அவன் மதுரைக் திருக்கோயிலில் விழாவெடுத்தான், கோபுரங்களைப் பொற் கலசங்களால் அணி செய்தான். இவன் காலத்தில்தான் சேக்கிழார்.பெரிய புராணம் பாடினரெனப் பேராசிரியர் பண்டாரத்தார் பிற்காலச் சோழர்' என்னும்தனது நூலில் கூறியுள்ளார். ஒரு சிலர்சேக்கிழார் இரண்டாம் குலோத்துங் கன் காலத்தில் இருந்தவர் என்பர். இவன் காலத்தில் வட. காட்டுப் பிராமணர்கள், சைவத் துறவிகள் வாழ்ந்து விந்த குகைகளையும் மடங்களேயும் அழித்தனர் என்றும், இiன் மகன். மூன்ரும் இராசராசன் அவற்றைச் செப்பனியோன் என்றும் கூறப்படுகின்றது. மூன்ரும் இராசராசன் தி) மையற்றவகை விளங்கியமையால் அவன் காலத்தில் சோழ நாடு அளவிற் குறைந்தது. பல சிற்றரசர் உரிமை பெற்ற்) னர். பாண்டியர் தலைதுாக்கினர். எனவே சோழப் பேரரசு வீழ்ச்சியுறலாயிற்று. எனினும் இவன் காலத்தில் சைவம் ஓங்கி இருந்தது. சந்தான குரவராகிய மெய்கண் டார் இவன் காலத்தில் வாழ்ந்தார் என்று கூறப்படுகின் றது. சோழப் பேரரசின் கடைசி மன்னன் மூன்ரும் இராசராசனின் மகன் மூன்ரும் இராசேந்திரன் (18461879) ஆவான். இவன் பாண்டியப் பெருவி ன் இரண் டாம் சுந்தர பாண்டியல்ை முறியடிக்கப்பட்டான். இவ னுக்குப் பின் சோழநாடு பாண்டி காட்டோடு இனேந்து விடவே, பாண்டியர் ஆட்சி ஓங்கிற்று. சோழர் காலத்துக் கோயில்கள் சோழர் காலத்தில் சோழர்கள் தில்லையைத் தங்கள் உயிராகக் கருதினர். அங்கு ஒரு அரண்மனை கட்டியிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/156&oldid=729905" இலிருந்து மீள்விக்கப்பட்டது