பக்கம்:Saiva Nanneri.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வழிபாடு திராவிடர்களுக்குரியதாகும் என்ற உண்மையி உலகிற்கு எடுத்துக்காட்டினர். - | இத்தகைய இலிங்கத்திற்குச் சிவம் அல்லது சிவன் என்ற பெயர் எங்ங்னம் ஏற்பட்டது? இதற்கு வடை பகால் எளிதன்று. சிவன் என்பவனும் [j]<і. வேகத்திே குறிப்பிடப்படும் உருத்திரனும் ஒருவனே என ச் :: எண்ணினர். அதற்குக் காரணம் இரண்டு சொற்களின் பொருளும் ஒத்திருத்தலேயாகும். ஆல்ை காலப் போக்ல்ெ தான் சிவனும் உ ரு த் தி ர னு ம் ஒன்ருக்கப்பட்டனர். சிவத்தை முதலாகக் கொண்ட சமயம் சைவ சமயம் எனப் பெயர் பெறலாயிற்று. இனிச் சைவ சமயத்தின் வளர்ச்சி யினேக்காண்போம். சைவ சமய வளர்ச்சியினே இரு கூருகப் பிரிக்கலாம். அவை எவை? அவைதாம் அக வளர்ச்,ெ புறவளர்ச்சி என்க. முதலிற் புற வளர்ச்சியினைப் பற்றிக் கூறுவாம். சங்க காலத்தே சைவம் பிற சமயங்ளோடு ஒன்றி வளர்ந்தது; பல்லவர் காலத்தின் தொடக்கத்தில் புத்த சமணத்தோடு போராடிக் கொண்டே வளர்ந்தது. பிறகு சோழர் காலத்தே தனிப்பட்டதொரு பெருஞ்சமய மாகவும், ஒரோ வழி வைணவத்தோடு போராடும் சமய மாகவும் வளர்ந்தது. அதன் பின்னர் பல்வேறு சமயங் களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வளர்ந்து வரு கின்றது. தற்காலத் சைவ சமயத்தின் கொள்கைகளுள் ஒரு சில சமணம் போன்ற சமயங்களுக்கும் பொதுவாக விளங்குகின்றன. பல்லவர் காலத்தும் சோழர் காலத்தும் சைவ சமயத்தை நன்கு வளர்த்தவை ஆடல் பாடல் முதலிய கலைகளாகும். இனி அக வளர்ச்சியினேக் கூறுவாம், சங்க காலச் சைவ சமயம் தனக்கே உரிய கொள்ள்ை களுடன் விளங்கியதாகத் தெரியவில்லே. பிறர் கம் கோட் பாடுகளையும் தழுவிக் கொண்டே வளர்ந்ததாகத் தெரிகி றது. எடுத்துக் காட்டாகத் தமிழரசர் சிலர் வேள்வி களேச் செய்தமையும், துலாபாரம் செய்வித்தமையும் கூற லாம். என்ருலும் ஒரு காலத்தே அது தனது சொக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/16&oldid=729909" இலிருந்து மீள்விக்கப்பட்டது