பக்கம்:Saiva Nanneri.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f58 வருண &னகளையும் காணலாம். அப்பர், சம்பந்தரால் குறிக் கப்படாத வைப்புத் தலங்கள் பல சுந்தரர் பதிகங்களில் காணப்படுகின்றன. " சிவனே வழிபடுங்கள் தீவினை அற்று நன்மை அடைவீர்கள். திருப்பதிகங்களைப் பாடிப் பயன்பெறுங்கள். ஐந்தெழுத்தோதி நன்மை பெறலாம்: ஐந்தெழுத்தே நல்ல துணை ஐம்பொறிகளையும் அடக் குங்கள்; மனத்தை ஒருவழிப்படுத்தி இறைவனே அடை யுங்கள் சிவனேக் காண்பீர்கள்” என்பன மூவர்தம் அறிவுரைகளாகும். முதல் ஏழு திருமுறைகள் பண்ணுேடும் தாளத் தோடும் பாடத்தக்கவை. ஆனல் திருவாசகம் அத்தகை யது. அன்று. மணிவாசகர் எங்ஙனம் உழன்று உழன்று இறைவனது அருளைப் பெற்ருர் என்பதை எடுத்துக்கூறும் இக்நால் படிப்பாரை உருக்கும் தன்மையது. கொண்ட குறைகளைக் கூறிக் கடவுள்முன் அழுதால் அவனே அடை யலாம் என்பது மணிவாசகரின் கோட்பாடு. கடவுளிடம் என்றும் இறவாத காதல் பெற விரும்பும் பக்தன் அன்பை அடிப்படையாகக் கொண்ட மெய்யடியாருடன் தொடர்ந்து பழக்வேண்டும் என்பது சைவ சித்தாந்தக் கொள்கைளுள் ஒன்று. இதனைச் சிவஞான போதம் பன்னிரண்டாம் சூத் திரம் நன்கு வற்புறுத்துகிறது. மணிவாசகர் இத்தகைய அடியார் குழாத்தில் தம்மை வைக்குமாறு இறைவனே வேண்டுகிரு.ர். இவ்விரண்டும் திருவாசகத்தின் உயிர்காடி 'களாகும். ஆன்மாவாகிய தலைவன் கடவுளாகிய தலைவி யைப் பல சோதனைப் படிகளைக் கடந்து கூடுதலே திருக் கோவையாரில் குறிக்கப்படும் பொருளாகும். பாக்கள் இனிமையும் ஆழமும் உடையவை. ஒன்பதாம் திருமுறை யில் காணப்பெறும் பாக்களில் பல ஐந்தொழில் இயற்று கற்கேதுவாகிய திருநடனம் செய்யப்படும் ஒளி நிலையமாக விளங்கும் தில்லையின் சிறப்பை எடுத்தோதுகின்றன. இருமூலர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் ஆ. பாகும். சங்க காலத்திற்குப் பிறகு தமிழராய சோழர் ஆட்சியில் தமிழ் நாட்டு நாயன்மாரைப் பற்றித் தமிழர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/163&oldid=729913" இலிருந்து மீள்விக்கப்பட்டது