பக்கம்:Saiva Nanneri.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6ひ இந்துவாழ் சடையான் ஆடுமானந்த எல்லையில் தனிப் பெருங்கூத்தின் வந்தபேரின்ப வெள்ளத்துள் திளேத்து மாறிலா - மகிழ்ச்சியில் மலர்ந்தார். மேலே தரப்பட்டுள்ள சேக்கிழார் பாடல்கள் பக்திச் சுவையினயும் கவிச் சுவையினையும் நன்கு எடுத்துக்காட்டு கின்றன. சோழர்கள் காலத்தில் விளங்கிய ஏனைய சைவப் புல வர்களிலே கருவூர்த்தேவரும் ஒட்டக்கூத்தரும் குறிப்பிடத் தகுந்தோராவர். தஞ்சை இராசஇராசேச்சுரமுடைய பெருமான் மீது திருவிசைப்பா என்னும் நூலைப் பாடிய கருவூர்த்தேவர் கம்பியாண்டார் நம்பிகளைப் போன்று இராசராசன் காலத்தில் வாழ்ந்தவர். மற்ருெரு புலவராகிய ஒட்டக்கூத்தர் செங்குக்த மரபில் தோன்றிய சைவராவார். இவர் மூவருலா, தக்கயாகப் பரணி முதலிய நூல்களைப் பாடினர். இராச ராச விசயம், இராசராசேசுவர நாடகம் ஆகியவையும் சோழர் காலத்தில் பாடப்பட்டனவாகும். ஆல்ை இவ்விரண்டு நூல்களும் இன்று கிடைக்கப் பெற் றில. தஞ்சைப் பெரிய கோவிற் கல்வெட்டின் மூலம் கான் இராசராசேசுவர நாடகம் என்னும் நூல் இருந்தது என்பதை அறிய முடிகின்றது. இவ்வாறே பூந்துருத்தி யிலுள்ள கல்வெட்டு ஒன்று சீ இராசராச விசயம்என்னும் து லேப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இராசராசேசுவர நாட கக்கைத் தஞ்சை மாநகரில் ஆண்டுதோறும் விழாக்காலங் களில் கடித்தற்கு இரண்டாம் இராசேந்திரன் நூற்றிரு ப. கல நெல் கிவந்தமாக அளித்திருந்ததாகக் கல்வெட் டொன்று கூறுகின்றது. மெய்க்கீர்த்திகள் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒர் அரிய புதுமையைப் க்ளுென் பேரரசனை இராச ராச சோழன். அதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/165&oldid=729915" இலிருந்து மீள்விக்கப்பட்டது