பக்கம்:Saiva Nanneri.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மட்டுமே மெய்கண்ட தேவர் அருளினர் என்பது சில ருடைய கொள்கை. ஆல்ை பழைய வரலாறு கூறுவது குத்திரங்கள், மேற்கோட் செய்யுட்கள், பொழிப்புரை ஆகிய மூன்றையும் மெய்கண்ட தேவர் அருளிச் செய்தார் என்பதாகும். சிவஞான போதம் என்னும் நூல் சுத்தாத் துவிதம் எனப்படும் சைவ சித்தாந்த முடிவை விளக்கிக் கூறும் பன்னிரண்டு சூத்திரங்களைக் கொண்டது. அள வில் சிறியதாக இந் நூல் விளங்கினலும் சிறந்த கருத்துக் களேக் கொண்டு விளங்குகின்றது. தர்க்க முறைப்படி சைவ சித்தாந்தக் கொள்கைகளை ஆணித்தரமாகக் கூறு கின்றது. இந்நூலாசிரியராகிய மெய்கண்ட தேவர் சந்தானுசாரியர் கால்வருள் முதன்மையானவர். இவர் சைவ வேளாண் குடியிற் பிறந்தவர். இவரது தந்தையார் அச்சுதகளப்பாளர் ஆவார். இவரது இயற்பெயர் சுவேதவனப் பெருமாள் என்பதாகும். காலம் 18-ஆம் நூற் ருண்டு. இவர் பெண்ணுகடத்தில் பிறந்தவர். ' கடவுள் உண்டு ; கடவுள் உயிர்களுடன் அத்து விதமாக நின்று அவைகட்கு வினைப் பயனை ஊட்டுவார் : உயிர்கட்குப் பாசத் தொடர்பால் பிறப்பு இறப்பு நிகழும். உயிர்-பரு உடல், அறிகருவிகள், நுண் உடல், மூச்சு இவற்றுக்கு வேருனது தானே அறிவதன்றி உணர்த்த உணருவது; உடற்கரணங்கள் கூடியிருப்பினும் அவற் அறுக்கு வேருய் கின்று அறிவது பண்டைக் கால முதலே, ஆணவ மலத்தால் கட்டுண்டு கிடப்பது. புற-அகக் கரு விகளும் உயிரும், அமைச்சும் அரசும் போல்வன. அக் கருவிகள் உயிர்க்குத் துணை செய்வன. இவை யாவும் தொழிற்படுங் காலம் உயிர்க்கு கனவு நிலை எனப்படும். இவற்றுட் சில குறைந்த காலம் உயிர்க்குக் கனவு கிலே என்பதாம் பெயர். மேலும்சில குறைந்த போது உறக்கநிலை எனப்படும். இவையாவும் நீங்கி உயிர் தன்னிலையில் கிற் கும் போது, பேருறக்கநிலை எனப்படும், உயிரின் அகங் காரம் ஒடுங்கிய கிலே உயிர்ப்பு அடக்கம் எனப்படும். H கருவிகள் அறிவற்றனவாதலின் தம்மையும் அறியா , தம் f"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/167&oldid=729917" இலிருந்து மீள்விக்கப்பட்டது