பக்கம்:Saiva Nanneri.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மைச் செலுத்தும் உயிரினையும் அறியா, அவைபோல உயிர் களும் தம்மை அறியா; தம்மைச் செலுத்தும் இறைவனே யும் அறியா. சத்து என்பது என்றும் கேடின்றி விளங் கும் பொருள். எனவே இறை ஒன்றே அவ்விலக்கணக் துக்கு இலக்கியமாகும். ஆயினும் சைவ சித்தாக்கத்தின் முப்பொருள்களாகிய இறை, உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) என்பன என்றுமுள பொருள்களாக ஒப்புக் கொள்ளப்பட்டன. ஆகவே இவை மூன்றும் சக்கே ஆம். ஆயினும் உயிரும் உலகமும் விகாரமடைவதால் அசத்து ஆதல் பெறப்படும், இவை மூன்றினையும் வேறு பிரித்தறிய இவை முறையே சிவசத்து, சதசத்து, சட சத்து என்று பிரிவுறும். சார்ந்ததன் வண்ணமாதல் உயி ரின் சிறப்பிலக்கணம். அஃது அசத்தாகிய உலகத்தையும் சத்தாகிய பரம்பொருளையும் அறியவல்லது அசத்தை விட்டுச் சத்தைப் பற்றவல்லது. உயிர்களின் தவத்தால் இறைவன் குருவடிவில் வந்து பக்குவமுடையவர்க்கு ஞானத்தை உணர்த்தித் தன்பால் அவர்களேச் சேர்ப்பன். ஞானம் பெற்றவர் ஐந்தெழுத்து ஓதி இரான நிலையைக்கப் பர். இவ்வாறு ஞானத்தைப் பேணும் உயிர்கள் இறை வன் தம்முடன் ஒன்றி கிற் றலால் பாசம் நீங்கப்பெறும். இறைவன் உயிர்கட்குத் துணேயாக நின்று சிவப்பேறு அல்லது முத்திநிலையைக் காட்டுவான் அதனேக் காணு மாறு உதவியும் செய்வான். இப்பிறவியிலேயே சிவத்தை உணர்ந்தவர்களாகிய சீவன்முத்தர்கள் அடியாரினக்க முடையவராய் சிவவேடத்தையும் சிவன் கோயிலேயும் வழி படும் நியமம் உடையவராய் நிற்பர் ” ஆகியன இந்நூலிற் காணும் கருத்துக் குவியல்களாகும். சிவஞான சித்தியார் என்னும் நால் இப்பதினுன்கு சாத் திரங்களுள் மிக விரிவானது. சுருங்கக் கூறின் சிவஞான சித்தியார் என்பது சிவஞான போதத்திற்குச் செய்யுள் வடிவில் உரை கூறுவது போன்று அமைந்த நூலாகும். பதி பசு பாச உண்மைகளையும், பதியைப் பசு அடையும் வழி, பாசத்தின் இயல்பு ஆகியன பலவும் இந்நாலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/168&oldid=729918" இலிருந்து மீள்விக்கப்பட்டது