பக்கம்:Saiva Nanneri.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தருக்க முறையில் திறம்படக் கூறப்புட்டுள்ளன. குருவின் மாண்பு, சிவவேடப் பெருமை, ஐந்தெழுத்தின் சிறப்பு முதலியவற்றையும் இந்நூலாசிரியர் அழகாகக் கூறியுள் ளார். இந் நூலாசிரியராகிய அருணங்தி சிவாசாரியார் திருத்துறைப்பூண்டியில் அந்தணர் குலத்தில் பிறந்து, ஆகமங்களே ஐயந்திரிபறப் பயின்று மெய்கண்டாரின் மாணவராக விளங்கி இத்தகு சிறப்புடைய நூலைச் செந்தமிழ் நாட்டுக்கு அருளித் தந்து ஆண்டவன் அருளைப் பெற்றுச் சிறப்பெய்தினர். இருபாஇருபஃது என்னும் நூலும் இவரால் செய்யப்பெற்றதேயாகும். இந்நூல் வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஒன்றன் பின் ஒன்று தனித் தனி அமைய இருபது பாடல்களைக் கொண்டது. தமது ஆசிரியரை முன்னிலைப்படுத்தி வினவுதலும், அதற்கு விடை கூறுதலுமானமுறையில் இந்நூல் அமைந்துள்ளது. அருணந்தி சிவாசாரியாரின் மாணவரே சந்தானுசாரியார் கால்வருள் ஒருவராகிய மறைஞான சம்பந்தராவார். இவ ரது மாணவரே உமாபதி சிவாசாரியார் ஆவார். இவர் கொற்றவங் குடியில் அந்தணர் மரபில் உதித்தவர் ; சக்தாசைாரியர் நால்வருள் ஒருவர். சிவப்பிரகாசம், கொடிக் கவி, நெஞ்சு விடு தாது, திருவருட் பயன், சங் கற்ப நிராகரணம் முதலிய சைவ சித்தாந்த நூற்களை யும், கோயிற்புராணம், சேக்கிழார் புராணம் முதலிய புராண நாற்களையும்எழுதியவர். இவற்றுள் சிவப்பிர காசம் என்னும் நூல் பதி பசு பாச இலக்கணங்களேயும், திட்சை விதிகளையும் பற்றிக்கூறுகிறது. திருவருட் பயன் என்னும் நூல் குறள் வெண்பாவால் ஆனது. இதற்கு கிரம்ப அழகிய தேசிகர் எழுதிய உரை உண்டு. ப, பசு பாச இலக்கணங்களையும் ஐங்தெழுத்தின் மாண் பையும் இதன்மூலம் தெளிவாக அறியலாம். மாயாவாதி அ. கியவாதி முதலான வாதிகளைத் தர்க்க முறைப்படி n.lத்துச் சைவ சித்தாந்த உண்மையைச் சங்கற்ப கிரா ம்ை என்னும் நூல் கூறுகின்றது. இதற்குத் திரு வொற்றியூர் ஞானப்பிரகாசரும் இராமானங்த சுவாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/169&oldid=729919" இலிருந்து மீள்விக்கப்பட்டது