பக்கம்:Saiva Nanneri.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வரை பூத பரம்பரை எனவும் அவர்க்குப் பின் வந்தவர் அபிடேக பரம்பரையினர் எனவும் கூறப்படும். நமசிவா யரே முதலாசாரியார். தற்போதுள்ளவர் 21ஆம் ஆசா ரியார். நமசிவாய தேசிகர் மெய்கண்ட சாத்திரத்துள் இருபா இருபஃது, வினவெண்பா என்ற இரண்டுக்கும் உரையெழுதினர். இம்மடத்தைச் சேர்ந்த தட்சினமூர்த்தி தேசிகர், தசகாரியம், உபதேசப் பஃருெடை என்ப வற்றை எழுதினர். அம்பலவாண தேசிகர் என்பவர் தச காரிய முதல் நமச்சிவாய மாலே ஈருகப் பத்து நூல்கள் எழுதி உள்ளார். பண்டார சாத்திரம், சிவஞான போதச் சிற்றுரை, பேருரை முதலிய நூல்களும் இவ்வாடுதுறை மடத்தைச் சேர்ந்தவையாகும். இம்மடத்தைச் சேர்ந்த சிவ ஞானயோகி எனப்படும் சிவஞான முனிவர் பரந்த பேரறிவு படைத்த ஒரு பெரும் புலவராவார். இவரது காலம் பதினெட்டாம் நூற்ருண்டு. இவரது பெற்ருேர் ஆனந்தக்கூத்தர், மயிலம்மை என்போர்: ஊர் விக்கிரம சிங்கபுரம் : குலம் சைவ ேவ ள | ள ர் இவரது இயற்பெயர் முக்களாலிங்கர். இளமையிலேயே கல்வி யறிவும் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்த இவர் திருவா வடுதுறையை அடைந்து பின் வேலப்ப தேசிகரால் அருள் செய்யப்பெற்றுத் துறவியானர். இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகிய மூன்றிலும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கினர். வடமொழி அறிவும் பெற்றிலங்கினர். சிவஞான போத விரிவுரை, அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், காஞ்சிப் புராணம், சிவ சமயவாத மறுப்பு, தொல் காப்பியச் சூத்திர விருத்தி என்பன இவர்தம் நூல்களா கும். இவரது பேருரை சிவஞான பாடியம் எனப்படும். இன்று இவ்வாதினத்தின் குருமகா சங்கிதானமாக விளங்கும் திருப்பெருங் திரு சுப்பிரமணிய தேசிக பரமா சாரிய சுவாமிகள் சைவ நூற் புலமையும் தமிழ் அறிவும் மிக்கவர். சைவ சித்தாந்த சாத்திரங்கள் யாவற்றையும் உரையுடன் வெளியிட்டு அவற்றை இலவசமாக மக்க ளுக்குக் கொடுத்துதவி வருகிரு.ர். திருமந்திர மகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/179&oldid=729930" இலிருந்து மீள்விக்கப்பட்டது