பக்கம்:Saiva Nanneri.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 டையே நிலவி வந்தது என்று அறியும் அளவுக்குச் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. சிவனைப் பற்றிப் பிற்காலச் சைவ, திருமுறைகளில் காணப்படுகின்ற கதைகளிலே பிறப் பானவை சங்க நூற்களிலும் காணப்படுகின்றன. வென் றன் உருவங்கள் சங்க இலக்கியங்களிலே பலவாருகக் குறிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் சிவனைப் பற்றிக் காணப்படும் திருக்குறிப்புக்களை நால்வகையாக வகுத்துத் தொகை வகை செய்து காணலாம். அத்திருக்குறிப்புகளுட் பில செழ்மேனி அம்மானின் திருமேனி பற்றியவை; சில அவன் திருமேனியிற் காணப்படும் கொன்றைமாலை, படை முதலி யவற்றைப் பற்றிக் கூறுவன. இன்னுஞ் சில அவன் செய்த ஈரமும் வீரமும் பொருந்திய செயல்களைச் சித்திரிப்பன : ஒரு சில அவன் கோயில் கொண்டுள்ள இடத்தைச் சுட்டும் சிறப்புடையவை. சிவபெருமான் கற்றைச் சடையும், நெற்றிக்கண் ஆணும், கறைமிடறும், உமையொரு பாகமும், எண் காங் களும் உடையவன் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடு கின்றன. "தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே’’ (புறம்) " நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் ’ (அகம்) கறைமிடற் றண்ணல் காமர் சென்னி (புறம்) நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் ’’ (ஐங்குறு நாறு) மாருப்போர் மணிமிடற்று எண்கையாய் (φωθ) -- இனி வருபவை சிவன்றன் திருமேனியிலும் திருக் கரத்திலும் காணப்படும் பொருள்களும் அவன் ஊர்ந்து செல்லும் ஊர்தியும் பற்றியவையாகும். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/22&oldid=729943" இலிருந்து மீள்விக்கப்பட்டது