பக்கம்:Saiva Nanneri.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இடபத் தரவி பேய் பிசாசுகளினின்றும் காத்தற் பொருட்டுத் திரு மர்லின் ஐம்படைத் தாலியைப் பிள்ளைகட்கு அணிவித்தல் தொன்றுதொட்டு வரும் தமிழ் மரபாகும். அதேபோலச் சிவனது மழு, வாள், எருது ஆகியவற்றைப் போலப் பொன்னுற் செய்து மக்கள் அணிந்திருந்தனர் என்று கலித் தொகையும் அதன் உரையும் கூறும். திருமுருகாற்றுப்படையின் மூலம் அக்கால மக்கள் செய்த பல்வித வழிபாட்டு முறைகள் நன்கு விளங்கும். கடவுளிடம் வசம் வேண்டிப் பக்தர்கள் உண்ணுவிரதம் இருந்தனர் என்று கலித்தொகையும் பதிற்றுப்பத்தும் கூறுகின்றன. தாம் வணங்கும் குலதெய்வங்களின் திருநாமங்களைப் பெற்ற பிள்ளைகளுக்கு இட்டு வழங்கிடுதல் கெடுகாட் பழக்கமாகும். அப்பழக்கத்தின் அறிகுறியாகச் சிவனர் தம் திருப்பெயர்கள் தாங்கிய புலவர் சிலர் சங்க இலக் கியங்களில் கானப்படுகின்றனர். அவர்களுட் சிலர் வெணபூதி, பேரெயின் முறுவலார், உருத்திரன், இறை யனர் என்பவராவர். | இதுகாறும் எடுத்துக்காட்டிய சங்க இலக்கிய மேற் கோள்களாலும், வரைந்த செய்திகளாலும், கூறிய விளக் கங்களாலும் சங்க காலத்தில் சைவம் நன்கு வலிவும் பொலிவும் பெற்று விளங்கியிருத்தல் வேண்டும் என்பது புலகும். இதனுற்ருன்போலும் கி. பி. ஏழாம் நாம் முண்டுக்கு முன்னர் சிவன் என்ற பெயரைத் தமிழர் அறி யார் என்று கூறிய டாக்டர் இரமண சாத்திரிகள், "But there are grounds for believing that Siva was a home that the Tannils had learnt to use for the deity even in the earliest period” என்று கூறினர் போலும். இதன் பொருளாவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/25&oldid=729946" இலிருந்து மீள்விக்கப்பட்டது