பக்கம்:Saiva Nanneri.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 களும் கூறப்படுகின்றன. இந்த அந்தணர்கள் 48 ஆண்டு கள் பிரமசரிய விரதம் மேற்கொண்டவர்கள்; வேத வேள் வியைச் செய்தவர்கள். அவர்கள் கீழ்க் கூறியாங்கு முரு கனே வழிபடுகின்றனர். 'ஒன்பது கொண்ட மூன்று புரிநுண்ஞாண். புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர்; தற்புகழ்ந்து ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி காவியல் மருங்கின் நவிலப் பாடி - விரையுறு நறுமலர் ஏந்தி பெரி துவந்து ஏரகத்து உறைதலும் உரியன்.” இதற்கடுத்தது குன்றுதோருடல் ஆகும். இங்கே குன் றுகளில் வாழும் மக்கள் குரவைக் கூத்தாடி முருகனே வழி படுவதைக் காணலாம். கொடுக்தொழிற்கானவர்கள். குளr வியும் கூதாளமும் சூடிச் சந்தனம் பூசிப் பின் தேற8லத்தம் கிளையுடன் குடித்துத் 'தொண்டகச் சிறு பறைக் குரவை’ அயருகின்றனர். குன்றக் குரவையின் முழு அழகையும் நாம் சிலப்பதிகாரம் குன்றக்குரவைக் காதை யில் காணலாம். குன்று தோறும் குரவைக் கூத்து நை பெறும் பொழுது முன்னேய இடங்களில் இருந்தது போல முருகன் வாளா இருக்காது, அவர்களைப் போல அவனும் குல்லேயும் முல்லையும் காந்தளும் வேங்கையும் அணிந்து கொண்டும் சந்தனத்தைப் பூசிக் கொண்டும் அக் கானா மகளிரோடு கைகோர்த்துக் குரவைக் கூத்தாடுகின்றனன். 1. வழிபாட்டு நூலாம் முருகாற்றுப் படையிலே மிகச் சிறந்த பகுதியாகக் கூறப்படுவது பழமுதிர் சோலேயைப் பற்றியதாகும். இங்கே தான் முருகாற்றுப் படையின் ஆஉயிர்நிலை உளது எனினும் தவறில்லை. முருகனை வழி படும் இடங்களும், அவனுக்கு வழிபாடு செய்யும் விதமும் ஆற்றுப் படுக்கும் முறையும் இப்பகுதியில்தான் தெளி வாகக் கூறப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/30&oldid=729952" இலிருந்து மீள்விக்கப்பட்டது