பக்கம்:Saiva Nanneri.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 குன்று தோருடலிலே முருகன் ஒவ்வொரு குன்றிலும் ஆடுகின்றன். அதன் மூலம் அகில உலகமெலாம் ஆண் 1.வனின் உறைவிடங்கள் என்ற தத்துவத்தைப் புலவர் போதிக்கிருர். இங்கே குறமகளிரோடு முருகன் கை கோர்த்துக் குரவையாடல் இறைவன் ஆன்மாக்களோடு ஆடும் கூத்தைக் குறிக்கின்றது என்று கூறலாம். பழ முதிர் சோலேயிலே நாம் பலவகை வழிபாட்டிடங்களைக் காணலாம். வழிபாட்டிற்கு, தகுதியுள்ள இட்ம், தகுதி யற்ற இடம் என்ற வேறுபாடில்லை. எல்லாம் ஏற்ற இடங்களே. குன்றுதோருடல் ஒழிந்த திருப்பரங்குன் ம்ை, திருச்சிாலேவாய், திருஆவினன்குடி, திருவேரகம் என்ற இடங்கள் சாத்திரமும் கோத்திரமும் சடங்கும் தளரா முயற்சியும் கொண்டு நூலுணர்வுடையவர் வழி பாடு ஆற்றுதற்குரிய இடங்களாக முன்னர்க் குறிக்கப் பட்டன. அவையெலாம் அவ்வுயர்ந்தோர்க்கு வழிபாட் டிற்கு ஏற்றவை ஆயினமை போல இப்பகுதியிற் கூறப் படும் இடங்களும் வழிபாட்டிற்கு ஏற்றவையாம். வழி பாட்டிடங்களால் உயர்வு தாழ்வு இல்லை. வேண்டிய கெல்லாம் அன்பு ஒன்றேயாகும். அன்புடையார்க்கு முரு கன் யானே எளிய கை வந்து அருள் புரிவான். சிறுதினே யும் கறுமலரும் தாவி, மறியறுத்துக் கோழிக்கொடி ாட்டி ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவிலும் முருகன் தோன்றுவான் ஆர்வலர்ஏத்தும் மேவரு கிலேயினும் அவன் காட்சி கருவான்; வேலன் வெறியாடும் களத்திலும் முரு கனேக் காணலாம். காட்டிலும் மேட்டிலும் ஆற்றிலும் முளAதிலும் சதுக்கத்திலும் சந்தியிலும் மரத்தடியிலும் மன்றத்திலும் எங்கும் முருகன் திருருடம் புரிவான். அவ 燃器 இடம் பற்றி வேறுபாடே இல்லை. நறுமணங் கம மும் பொழிலாகவும் இருக்கலாம்; புலால் காறும் போர்க் அனமாகவும் இருக்கலாம், நாகரிகம் செழிக்கும் நகரமாக வும் இருக்கலாம்; நாகரிகத்தின் வாடையே அடியாத மலை , காடாகவும் இருக்கலாம். முருகன் தோன்றவே செய் வான். கண்ணேக் கவரும் வண்ண மலர்கள் இட்டுப்பூசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/37&oldid=729959" இலிருந்து மீள்விக்கப்பட்டது