பக்கம்:Saiva Nanneri.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 செய்தாலும் முருகன் அருள் கிட்டும். அதுவன்றிக் குற மகள் போல, ஆட்டுக்கொலே, அச்சமூட்டும் வெறியாட்டு. செங்ெேராழுகும் அரிசி ஆகியவற்றின் மூலம் வழிபட் r அலும் முருகன் அருள் கிடைக்கவே செய்யும். இங்கு வேண் டியதெல்லாம் அன்பு! அன்பு உளமார்ந்த உண்nை அன்பு! அந்த அன்புக்கு முருகன் கட்டுப்படுகிறன் . அவனே அருட் கொண்டல்; அருள் வள்ளல். இங்.ே ஆற்றுப்படை நடைபெறுகிறது. ஆனல் பிற ஆற்றுப் படைக்கும் இந்த ஆற்றுப்படைக்கும் வேறுபாடு உண்டு. இங்கே ஆற்றுப் படுக்கப்படுவர் இரவலர் அல்லர்: / ) வலர். புதுமை இது புரட்சியும்கூட. இங்கே முருகன் அடியார்களிடத்திலே ஆற்றுப்படுத்தப் படுகின்ருன். அங்கே கலேக்கும் பரிசிலுக்கும் இடையே பரிமாற்றம். இங்கே அன்புக்கும் அருளுக்கும் இடையே பரிமாற்றம். பிறர் தம்மிடம் வந்து இரங்தபின் கொடுத்தலைவிட அவர் இருக்குமிடங்தேடிக் கொடுத்தல் சிறப்புடையதல்லவா? அதனேயே முருகன் செய்கின்ருன். - --- முருகாற்றுப் படையின் இறுதியிலே அருவியின் பெரு முழக்கம் கேட்கிறது. அதிலேயும் ஒரு நுட்பம் கண்டு கூறியுள்ளார் பேராசிரியர் தெ. பொ. மீனுட்விகம் தரம். மலேயிலிருந்து இழுமெனும் ஒசையுடன் அருவி ஒழுகி வருகின்றது; பொன்னும் மணியும் பழமும் மரமும் தேனும் ஆரமும் அகிலும் அடித்துக்கொண்டு விழுகிறது. இதைக்கண்டு மடகடை மஞ்ஞை வெருவுகிறது: கோl/) வயப்பெடை இரிகின்றது; கேழல் ஒடி ஒளிகிறது; காட டெருமை ஒட்டம் பிடிக்கிறது. இதே கிலேதான் கடவுள் அருள் அருவி வெள்ளம் பொழியும் போதும். ஆண்டவன் அருளாகும் அருவி வீடுபேற்றின்பத்தைச் சுமந்துகொண்டு வந்தாலும் விலங்குணர்வுடையோர் அவ்வருளேத் துய்த்து வீடு பேற்றின்பத்தைப் பெருமல் ஆற்ருது நெஞ்சம் அஞ்சி உடல் நடுங்கி ஓடிப்பதுங்கி ஒழிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/38&oldid=729960" இலிருந்து மீள்விக்கப்பட்டது