பக்கம்:Saiva Nanneri.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 சமய கெறியும் வழிபாட்டு முறையும் தமிழ் நாட்டில் மாற் றம் பெற்றன எனக் கூறவேண்டும். இக்காலத்தில்தான் வைதிக சமயம் தமிழ் நாட்டில் வேரூன்றத் தொடங்கியது; சமணமும் பெளத்தமும் கூடச் செல்வாக்குடன் விளங்கத் தொடங்கின. ஆல்ை சமயங்கள் பலதோன்றிய போதிலும் அவை தம்முள் மாறுபடாது ஒன்றிக் கலந்து வாழ்ந்தன என்று கூறவேண்டும். எனினும் சாத்தனரது மணிமேகலை யின் வாயிலாக அவர் சமய மாறுபாட்டிற்கு வித்திட்டார் என்று எண்ண வேண்டியுள்ளது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும், பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகையிலும் காணப்படாத கோயில் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவ்வாறு அக் காலக் கோயில்களைப் பற்றிப் பேசுகையில் புறச்சமயத் தைச் சேர்ந்த இளங்கோவும் சாத்தனரும் சிவனுக்கு முதல் இடம் தங்து பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 'பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்: என்பது சிலம்பின் கூற்று. - 'துதல் விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கப் பூத மீருக' என்பது மணிமேகலை மொழி. இவை தவிர மணிமேகலை மற்ருெரு குறிப்பு வழங்கு கிறது. அது சைவசமய வரலாற்றிலேயே சிறப்பாகக்குறிப் பிடத்தக்க ஒன்ருகும். அது எது? அது சைவம்' என்ற சொல்லேயும் சைவத்தின் காவலனாகிய சிவனது தன்மையை யும் நமக்கு அறிவிக்கும் பகுதியாகும். 'இருசுட ரோடு இய மானன் ஐம் பூதம் என்று எட்டுவகை யுயிரும் யாக்கையுமாய்க் கட்டி கிற்போனும் கலையுருவினேனும் துடித்துத் துயர்தீர் தோற்றத் தோனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/40&oldid=729963" இலிருந்து மீள்விக்கப்பட்டது