பக்கம்:Saiva Nanneri.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காலத்தில்தான் சமயக் கோயில்கள் பெருகிப் பலவாயின. a னினும் சைவ வைணவக் கோயில்களே காடெங்கும் மிகுதியாகக் கானப்பட்டன. இக்கோயில்களைத்தான் பின் வந்த சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பாடிப்பரவினர். அவர்கள் பாடிய பாக்களே முறையே தேவாரம், நாலாயிரப் பிரபந்தம் ஆகிய இலக்கியங்களாகி இன்றும் கின்று நிலவுகின்றன. கோயிலெடுத்த கேரச்செங்கனுன் சோழன் கோச்செங்கனன் சிறந்த சிவனடியாராக விளங்கிய போதிலும், சைவத்தையும் வைணவத்தையும் தன் இருகண்களாகவே கருதி இருசமயங்களேயும் செழித் தோங்கச் செய்தனன். திருக்கோயில்கள் பல எடுத்தனன். இவனது சிறப்பைத் திருமங்கை ஆழ்வார், "எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்தோன்' என்று பாடி யுள்ளார். இவன்கோயில்கள் கட்டியதோடு அமையாது, தில்லைக்குத் தில்லை வனம், மதுரைக்குக் கடம்ப வனம், குற்ருலத்திற்குக் குறும் பலா, காஞ்சிக்கு மாமரம் என்று ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரத்தைத் தல விருட்சமாக்கின்ை. இவல்ை கட்டப்பட்ட இச்சிறு கோயில்களே காயன்மார்களும் ஆழ்வார்களும் பல்லா யிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடுவதற்குக் கார oைrமாக அமைந்தன என்று சொல்ல வேண்டும். இக்கோயில் களே பிற்காலச் சோழப் பெருவேந்தர்களால் பெருங் கோயில்களாக ஆக்கப்பெற்றன. இறையடியார்கள் பதிகங் ாள் பாடிப் பைந்தமிழை வளர்ப்பதற்கும், சோழப் பெரு வேந்தர்கள் திருக்கோயிற் பணிகளில் ஈடுபடுவதற்கும் வித் இட்ட வேந்தன் இக் கோச்செங்கனனே ஆவான். எனவே இவ்வேந்த&னச் சைவர்களும் வைணவர்களும் என்றுமே ipத்தல் இயலாது. சைவ வரலாற்றில் இவனுக்குச் சிறந்து இடம் உண்டு. தில்லைப்பதியாகிய சிதம்பரத்தைச் சீரும் சிறப்பும் மிக்கதாகச் செய்த பெருமை இவனுக்கே உரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/41&oldid=729964" இலிருந்து மீள்விக்கப்பட்டது