பக்கம்:Saiva Nanneri.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாற்ருண்டாகலாம் என்று கூறியுள்ளார். இந்நூற்ருண் டில் வாழ்ந்த மற்ருெரு சிவனடியார் காரைக்கால் அம்மை யார் ஆவார். திருமந்திரம் மூவாயிரம் பாடல் கொண்டது. ஒன்பது இயல்களாகப் பகுத்துரைக்கப் பட்டுள்ளது. ஒவ் வோரியலும் தந்திரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்திருமந்திரத்தின் மூலம் அக்காலச் சைவ சமயத்தின் கிலையை நாம் நன்கறியலாம். திருமந்திர ஆசிரியராகிய திருமூலர் சித்தரும் சிவயோகியும் ஆவார். மூலன் என் லும் இடையன் திடீர் என்று இறக்க, அவன் மேய்த்து வந்த ஆடு மாடுகள் வருந்தும் நிலைகண்டு, அவன் உடலிற் புகுந்து ஆடு மாடுகளுக்கு இன்பம் வரச் செய்தவர். பின் னர் அப்படியே அவன் வடிவில் இருந்து திருமந்திரத்தைப் பாடியருளினர். இவரது கோயில் திருவாவடுதுறைத் திரு மடத்தில் உள்ளது. - திருமந்திரத்தின் நடையில் எளிம்ை கடம். புரியும். ஆல்ை சொல்லிலே திட்பமும் பொருளிலே, நுட்பமும் செறிந்து காணப்படும். கரை புரண்டு செல்லும் காவிரி யின் மேற்பரப்பிலே அமைதியே தோன்றும். ஆனல் ஆற் றின் கடுவேகம் அதில் கால் வைத்த போதுதானே தெரி கிறது. அதுபோலத் திருமந்திரம் பார்ப்பதற்குத் தான் எளியதாகத் தெரிகிறதே தவிர, சற்று உள் நுழைந்தால், அப்பொழுது தெரியும் திருமந்திரத்தின் பொருளாழம். 2)ø# →,ñ@avã ©&ù “Deceptive Simplicity” GTērl jir. திருமந்திரத்தைப் படிப்பாரை எளிதிலே உளங் கவருவன அதிலே அங்கங்கே காணும் அருமையான சொற்ருெடர் களாகும். அந்தச் சொற்ருெடர்களின் அமைப்பிலே ஒரு கவர்ச்சியுண்டு; படிப்பின் உளங் குளிரும். அவற்றில் சில வருமாறு:- - அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் . . . . - * (2944) 'இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்’ (2.108) உண்டி சுருங்கின் உபாயம் பலவுள' (735)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/43&oldid=729966" இலிருந்து மீள்விக்கப்பட்டது