பக்கம்:Saiva Nanneri.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3?' 'உள்ளம் பெருங் கோயில் ஊனுடம் பாலயம்’ (1823) 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (2104) 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (85) 'முத்திக்கு வித்து முதல்வன் ஞாலமே' (2506) சொல்லிலோ சுருக்கம்; கடையிலோ அழகு சொட்டுகிறது. கருத்திலோ கங்கையின் ஆழமும் இந்துமாக் கடலின் பரப் பும் தென்படுகின்றன. இத்தகைய சொற்ருெடர்களைச் சூத்திரங்கள் என்றே சொல்லலாம். இவற்றை Epigrams” எனினும் பொருத்தமே. சைவ சித்தாந்தப் பேரறி ஞர்க்கும் எளிதிலே விளங்காத தத்துவக் கருத்துக்களைக் கூட நகைச்சுவைபடக் கூறுவதில் திருமூலருக்கு இணை அவரே. 'திகைக்கின்றதிந்தையுள் சிங்கங்கள் மூன்று . நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு." "தாவாரம் இல்லாதான் தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி.” . 'மாங்காய்ப் பாலுண்டு மலைமே லிருப்பார்க்குத் தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி.' தமிழிலக்கணத்தில் உள்ள சிறப்பான பகுதிகளுள் ஒன்று வேற்றுமையுடைமையாகும். வேற்றுமைகளின் அருமையும் அவற்றின் பிரிவு நுட்பமும் பெருமையும் தமி ழிலக்கணம் கற்ருர்க்கே தெரியும். அத்தகைய வேற்று மையைத் திருமூலர் திருத்தமாகவும் தெளிவாகவும் பல இடங்களில் கையாண்டுள்ளார். அவற்றுள் ஒன்று வரு լճir նշ/:- * 'மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/44&oldid=729967" இலிருந்து மீள்விக்கப்பட்டது