பக்கம்:Saiva Nanneri.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 நியாயம், வைசேசிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம் என வேதங்களிலிருந்து கிளைத்த ஆறு உட் பிரிவுகளேக் கூறுகிருர். அத்துடன் அவர் காலத்து விளங் கிய பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம். பைரவம், என்பன சைவத்தின் உட்பிரிவுகள் என விளக்கியுள்ளார். திருமந்திரத்தின் மூலம் திருமூலர் காலத்துச் சைவம் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் என்று கால்வகையாக விளங்கிற்று என அறிய லாம். . . . . . . திருமூலர் சிவன்ப் பற்றி முற்காலத்து விளங்கிய கதைகளுக்குத் தத்துவப் பொருள் கூறியுள்ளார். முப்புரம் எரித்தமைக்குரிய பொருள் வருமாறு : ". - 'அப்பணி செஞ்சட்ை ஆதிபுராதனன் முப்புரஞ்செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே.. இது போன்றே சிவன் நஞ்சுண்டமைக்கும், மாலு மயனும் அடிமுடி தேடின்மை முதலிய கதைகளுக்கும் தத்துவக் கருத்துக்கள் கூறியுள்ளார். . . . . "சிவனுக்கு நிகராகும் தெய்வம் வேறில்லை; அவன் . பிறப்பு அற்றவன், பேரருளாளன்; யாவர்க்கும் இன்பம் அருள்வான். அவனைத் தொழுங்கள்; ஞானம் பெறலாம்: அவனே எந்த வகையிலும் ஏத்தலாம்; அவன் அருள் புரி வான்’-இதுவே திருமூலர் நமக்கு வழங்கிய் அறிவுரை. கனிபெற்ற கர்ரைக்கால் அம்மையார் காரைக்காலில் வணிகர் மரபில் தோன்றிய தனதத்த ரின் புதல்வியாகிய புனிதவதியார்ே காரைக்கால் அம்மை: யார்ர்வார். புனிதவதியாரின் கணவர் பர்மதத்தன் ஆவார். அம்மையாரது கண்வ்ர் ஒருநாள் இரண்டு மாம்பழ்ங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/48&oldid=729971" இலிருந்து மீள்விக்கப்பட்டது