பக்கம்:Saiva Nanneri.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பதிகமாகும். தேவாரப்பதிகங்களே திருப்பதிகம் என் னும் சிறப்புக்குரியன. அப்பதிகங்களுக்கு முன்னர் இப் பதிகம் பாடப்பட்ட் காரணத்தால் இதற்கு முத்த இருப் பதிகம் என்னும் பெயர் ஏற்பட்டது. காரைக்கால் அம்மையார் தமது பாடல்களில் விவக்கr இரண்டு வகையில் வைத்துப் பாடுகின்ருர். சிவனே முழு முதற் பொருளாக வைத்துப்பாடல் ஒரு முறை சடையும் பிறையும் நுதல்விழியும், பாம்பும் கொண்டு, கங்கை, உமை ஆகிய இருவரையும் உடன் கொண்டு விளங்கும் சிவனது வடிவத்தைப் பாடல் மற்ருெரு வகை.

உலகைப் படைத்துத் துடைப்பவன்; அவன் அரு ளாற் காணத் தக்கவன்; அறிவு வடிவினன்; நிலம் ர்ே வி முதலியவற்றை உருவகமாக உடையவன்; ஒளி வடிவினன்: ஒருருவும் இல்லாதவன்; என்றும் அன்பர் கினைந்த உருவில் வருபவன்; நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொள்ப வன்; அவனுடைய அருளே முதன்மையானது; எனவே அவனே நெஞ்சில் வைத்து வழிபடுதல் வேண்டும்; அவனுக் குத் தொண்டு செய்வதே கடன், அதுவே அவனருளேப் பெறற்கு வழி"-இவை போன்ற இறைவனது முழுமுதம் பொருண்மை பற்றிய கருத்துக்களே இவரது பாடல்களில் காணலாம். இறைவன் அறிவு வடிவினன் என்பதைக் கூறும் பர்டல்'சுவை மிக்கதாகும்.

அறிவானுங் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றன் தானே -அறிகின்ற மெய்ப்பொருளுங் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுங் தானே அவன்.' இறைவனது.வடிவத்தைப் பற்றிப் பாடுங்கால் ச.ை. யொடு கூடிய சிவன் அணிந்திருக்கின்ற பாம்பை விலக்கல் வேண்டும் என்கிற கருத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/50&oldid=729974" இலிருந்து மீள்விக்கப்பட்டது