பக்கம்:Saiva Nanneri.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளங்கினன். எண்ணுயிரம் சமணத் துறவிகள் பாண்டிய காட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனைமலை, நாக மலே முதலிய மலைக்குகைகளில் அவர்கள் தங்கள் இருப் பிடங்களே அமைத்திருந்தனர். சோழ நாட்டு இளவரசி யும் நெடுமாறனது மனைவியுமாகிய மங்கையர்க்கரசி சைவப்பற்று மிகுந்தவள். பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிறையாரும் சைவர். இவ்விருவரது வேண்டுகோ ளின்படி கற்றமிழ் பாட வல்ல ஞானசம்பந்தர் பாண்டிய நாடு வந்து மதுரையில் ஒரு மடத்தில் தங்கி இருந்தார். இதனையறிந்த சமணர் அம்மடத்துக்குத் தீவைத்தனர். அதுகால் சம்பந்தர் பதிகம் பாடவே, அத் தியான்து பையவே சென்று ப ா ண் டி ய னே ப் பற்றியது. பின்னர் மங்கையர்க்கரசியார் வேண்டுகோளின்படி சம்புக் கர் பதிகம் பாடி மன்னனது வெப்பு நோயை அகற்றினர். இதற்கிடையில் சமணர் தம் மந்திாங்களில்ை மன்னனது நோயை க்ேக முயன்று கோல்வியுற்றனர். இதன் கார் ணமாய்ப் பாண்டிய மன்னன் மனம் மாறினன். இதன் பின்னர் சம்பந்தருக்கும் சமணருக்குமிடையே அனல் புனல் வாதங்கள் நடைபெற்றன. சமணக் கொள்கைகள் எழுதப்பட்ட ஏடும், சைவக் கொள்கைகள் பொறித்த ஏடும் தீயிலிடப்பட்டன. சமண ஏடு எரிந்தது; சைவ ஏடு எரியாதிருந்தது. இது அனல் வாதமாகும். இவ்வாறே சமண சைவ ஏடுகள் வையை நீரில் இடப்பட்டன. சைவ வrடு மாத்திரம் ைேர எதிர்த்து நின்றது. இவ்விடம் இன்று இருவேடகம் என்று வழங்கப்படுகின்றது. இவ்வூர் சோழ வந்தானுக்கு அருகில் உள்ளது. சமணர் ஏடு நீரோடு சென் :றது. இதுவே புனல் வாதமாகும். இவ்வாறு சம்பந்தர் இரு வாத்ங்களிலும் வெற்றி பெறவே, பாண்டிய மன்னன் மறு படியும் சைவகை மாறினன். தோற்ற ச்மணர் கழுவேதிகார்என்று சொல்ல்ப்படுகின்றது. இக்கதைக்கு அகச்சான்றும் இல்லே, புறச் சான்றும் இல்லை என்கிருர் திரு.வி.க. இதன் பின்னர் பாண்டிய நாட்டில் சமணர் செல்வாக்கு அடியோடு அழிந்தது: சைவம் தழைத்தோங்கியது. புத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/55&oldid=729979" இலிருந்து மீள்விக்கப்பட்டது