பக்கம்:Saiva Nanneri.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மங்கையில் (பொதிமங்கை) இருந்த புத்தக் குருவிஆனச் சமய வாதத்தில் சம்பந்தர் வெற்றி கொள்ளவே புத்த சம யச் செல்வாக்கும் அழியத் தொடங்கியது. அப்ப்ர் பெரு மானும் இவ்வாறே தொண்டை நாட்டிலும், பிற தமிழ்ப் பகுதிகளிலும் தல யாத்திரை செய்து பதிகங்கள் பாடிப் பைந்தமிழையும் சைவத்தையும் ஒருங்கே பரப்பினர். அப்பரது பெருமுயற்சியால் பழயாறையில் சமணர்தம் செல்வாக்கு மறைந்தது, இவ்வாறு அப்பரும் சம்பந்தரும் சமணரும் புத்தரும் செல்வாக்குடன் விளங்கிய இட்ங் களுக்கெல்லாம் சென்று சைவத்தின் புகழை நிலை நாட்டி னர். இதன் காரணமாய் காட்டு மக்கள் அனைவரும் சைவத்தின் மேன்மையை உணர்ந்து சைவ சமயத்தை மேற் கெர்ண்டனர். மேலும் மக்களை ஈர்க்கும் வண்ண்ம் இசை, நாடகம், கடனம் ஆகிய கலைகள் கோயிலில் கால்கொண் டன. பூசனையும் விழாக்களும் சிறப்புற நடந்தன. மன்னரும் செல்வந்தரும் கோயில் திருப்பணிகளுக்கு, அறங்களுக்கு வரையாது. வழங்கினர். சிவனடியார்களுக் குச் சமுதாயத்தில் பெருமதிப்பு ஏற்பட்டது. சிவனடி யார்கள் சைவசமயக் குரவர் என வழங்கப்பட்டனர் இக்காலத்தில்தான் சிறுத்தொண்ட நாயனர், முருக நாய ஞர் போன்றவர்களும் முழு மூச்சுடன் சைவத்தின் வளர்ச் சிக்காகப் பாடுபட்டனர். * * * * கி. பி. 670 முதல் 685 வரை பல்லவப் பெரு நாட்டை ஆண்ட பரமேச்சுரன் அழுத்தமான சிவபக்தன். சிவனே கினேயாதவர் நரகத்திற்குப் போவார் என்று இவனது கல்வெட்டுக் கூறுகிறது. இவன் உருத்திராக்கச் சிவலிங் கக் கிரீடம் அணிந்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது. கருங்கற்களே அடுக்கி முதல் முதல் கோயில் கட்டுவித்த வன் இவனே. காஞ்சியை அடுத்த கூரத்தில் சிவனுக்காக இக் கோயில் கட்டப்பெற்றது. இவனுக்குப் பின் இவன் மகன் இராசசிம்மன் (கி. பி. 666-705) பல்லவ அரசஞ் ன்ை. இவன் முதன் முதலில் கருங்கற்களைக் கொண்டு சை-4 * =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/56&oldid=729980" இலிருந்து மீள்விக்கப்பட்டது