பக்கம்:Saiva Nanneri.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இல்லையில் உள்ள கடராச மூர்த்தத்தில் பிற கோயில் மூர்த்தங்களின் சக்தி இரவில் வந்து அடங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு. திருமுறைகளைப் பாடிய மூவரும் தம் திருப்பாடல்களைத் தில்லைக் கோயிலில்தான் அடக்கம் செய்து மறைந்தனர் என்பதும் தி ல் லை க் கோயிலின் சிறப்பை நன்குணர்த்தும். தில்லைக் கோயிலில் நடராசர் திருவுருவம் எழுந்தருளச் செய்யப் பெற்றது போலவே திருவாரூர்க் கோயிலிலே வீதி விடங்கர் திருவுருவத்தை வைத்து வழிபட்டனர். இத் திருவுருவம் தனிச் சிறப்பு டையது. அதன் பெயர் தியாகராசர். அத் திருவுருவம் திருவாரூர்க் கோயிலேத் தலைமையாகக் கொண்ட சில கோவில்களில் வைக்கப்பட்டது. இ வ் வா று தில்லைக் கோயிலும் திருவாரூர்க் கோயிலும் பல்லவர் காலத்திலி ருந்தே சீரும் சிறப்பும் பெற்று விளங்கலாயின. f. பல கோயில்களில், கோயில் வருமானத்திற்கேற்ப ஆண்டில் சில திருவிழாக்களே நடைபெற்றன. திருவாரூர், தில்லை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மாத்திரம் ஆண் டில் பல மாதங்களில் விழாக்கள் நடைபெற்றன என்ப கைத் திருமுறைகளால் அறிகின்ருேம். நாயன்மார் வாழ்ந்து மறைந்த தலங்களில் உள்ள சிவன் கோயில்களில் அவர் பொருட்டுத் திருவிழா நடைபெற்றது. திருவாரூர்க் கோயி லில் தேவாசிரிய மண்டபம் என்ற பெரிய மண்டபம் ஒன் மறுண்டு. அதனில், சுந்தரர் காலத்தில், நாயன்மார் திருவுரு. வங்கள் வைக்கப்பட்டன. உயிரோடு இருந்த நாயன்மார் களும் அங்குக் கூடியிருந்தனர். அம் மண்டபத்தைப் பார்த்துத்தான் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடி ஆர். இதிலிருந்தும் திருவாரூர்க் கோயிற் சிறப்பை கன் கறியலாம். - பல்லவ மகேந்திரவர்மன் கால முதல் கல்லின் பயன் மிகுதியாக அறியவந்த காரணத்தினல் கல் இலிங்கங்கள் மிகுதியாகத் தோன்றின. வழுவழுப்பான இலிங்கங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/59&oldid=729983" இலிருந்து மீள்விக்கப்பட்டது