பக்கம்:Saiva Nanneri.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பதினறு பட்டை தீட்டப்பெற்ற இலிங்கங்களும் பல்லவர் காலத்தில் இடம் பெற்றன. கி. பி. 700-இல் நடுப் பகுதி யில் வாழ்ந்த மாமல்லனது சேனைத் தலைவரான பரஞ் சோதியார் என்னும் சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங் குடியில் கணபதிச்சுவரம் என்ற சிவன் கோயிலேக் கட் டினர். சம்பந்தர் அதனைத் தம் பதிகத்தில் பாடியுள்ளார். கணபதி பற்றிய குறிப்பு ஒன்றும் சங்க இலக்கியங்களில் இல்லே. கணபதி மகாராட்டிர நாட்டில் சிறப்பாக வழி படப்பட்டு வரும் தெய்வமாகும். சிறுத்தொண்டர் வாதாபி யின் மேல் படையெடுத்தார். சாளுக்கியரை முறியடித் தார். அங்கிருந்த செல்வத்தையும் பல பொருட்களேயும் காஞ்சிக்குக் கொண்டு வந்தார். தமிழகத்தில் இல்லாத வாதாபியில் இருந்த கணபதி உருவம் அவர் கருத்தைக் கவர்ந்தது. எனவே அவர் அதைக் கொணர்ந்து செங்காட் டங்குடியில் எழுந்தருளச் செய்தார். அதன் பெயரால் ஒரு சிவன் கோயிலைக் கட்டினர். பின்பு நாளடைவில் வினயகர் திருமேனிகன் மிகப் பல வடிவங்களில் நாட்டில் பெருகி விட்டன. பல்லவர் காலத்துக் கற்கோயில்களில் சிறப்பும் பழ மையும் வாய்ந்தன, திருச்சி மலைக் கோயில், திருவதிகை குணபதிச்சுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன வாகும். 'பல்லவர் காலத்துக் கற்கோயில்களின் அமைப்பு இமயத்திலுள்ள கைலாயகிரியை ஒத்திருக்கிறது” என்று சுவாமி விபுலானந்தர் கூறுவர். கைலாசநாதர் கோயிலின் அமைப்பு வருமாறு : 1. கருவறை. 3. நடு மண்டபம், 3. முன் மண்டபம். அதாவது 1. கர்பக்கிருகம் 3. அந்தராளம் 3. மகாமண்டபம் ஆகும். முகப்பிலுள்ள பெரு மண்டபத்தில் நந்தி, பலி பீடம், கொடிக் கம்பம் இவற்றைக் காணலாம். இந்த அடிப் படையில் சோழர் காலக் கோயில்கள் பெருகின. திருச்சுற்றுகள் கட்டப்பட்டன. பொன்னும் பொருளும் சேர்ந்த பிறகு சுற்றுச் சுவர்களும் அரண்களும் பெருகின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/60&oldid=729985" இலிருந்து மீள்விக்கப்பட்டது