பக்கம்:Saiva Nanneri.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தொடக்கத்தில் கருவறைமேல் நின்ற கோபுரங்கள் (விமானங்கள்) சுற்றுச் சுவர்கள் (மதில்கள்) ஏற்பட்ட பிறகு மதில் வாயில்களின் மேல் நிறுத்தப்பட்டன. இக் கோயில்கள் பின் வரும் சாத்திர அடிப்படையில் அமைக்கப்பட்டன எனவும் ஒரு சிலர் கூறுவர். ஆகம முறைப்படி, உடலில் இயங்கும் உயிர் ஐந்து இடங்களில் தங்கும். புருவருடு, கழுத்து, இதயம், உந்தி, அதீதம் என் பன அவ்வைந்து இடங்களாகும். கர்ப்பக் கிருகத்தின் நடு விடம் அதேம், அந்த ராளம் உந்தி, மகா மண்டபம் இத யம், அதன் வாயில் கழுத்து, முன்கோபுர வாயில் புருவ கடு என்று அவர்கள் கொள்ளுவர். இதய கிலே பெரு மண்ட பம் என்பதால் அங்கே இதயத் துடிப்பிற்கு மூல காரண மாகக் கருதப்படும் இறைவனது திரு கடனம் காட்டும் நடராச மூர்த்தம் நிறுவப்பட்டிருக்கும். உங்திக்கு இரண் டங்குலம் கீழே உள்ள பகுதி அதீதம். அதுவும் அதனே அடுத்துள்ள உந்தி கிலேயும் காற்றும் ஒளியும் புகாத இட மாதலால் கோயில்களே அமைக்குமிடத்துக் கருவறை இடை மண்டபம் ஆகிய இரண்டிலும் காற்றும் ஒளியும் புக முடியாதபடி அமைப்பது முறையாகும். தமிழ் நிலத்து ஐவகைக் கூறுகளுக்கும் ஒவ்வொரு தெய்வம் கற்பிக்கப்பட்டது நாம் அறிந்ததொன்றே. குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்குத் திருமால் மருதத்திற்கு இந்திரன்: நெய்தலுக்கு வருணன்(திர்த்தம்); பாலேக்குக் காளி, கதிரவன். சிவனுக்குத் தலைமையிடம் ஏற்படவே, ஐவகை நிலத் தெய்வங்களும் சிவன் கோயிலைப் புகலிட மாகக் கொண்டன. இவை பிற்காலத்தே பரிவார தேவ. தைகள் எனப்பட்டன. புராணவரலாற்றினை அடிப்படை யாகக் கொண்டு சில தெய்வங்கள் நிறுவப்பட்டன. அரசி யற்றலேவர்களும் செல்வர்களும் சில வழிபடு தலைவர்களே நிறுவினர். இவைகளும் பரிவார தேவதைகளாக்கப்பட் Ł–GÖT. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/61&oldid=729986" இலிருந்து மீள்விக்கப்பட்டது