பக்கம்:Saiva Nanneri.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? மக்கள் செய்த வழிபாட்டினே நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை யாவன: 1. சரியை-கோயிலே வலம் வருதல், 2. கிரியை-அர்ச்சனே செய்தல். 3. யோகம் - முன் மண்டபத்தின் வெளியில் ஒரிடத்தில் தனித்து இருந்து தியானித்தல். 4. ஞானம்-மன அமைதியோடு அமைதல். பல்லவர் காலத்து இrடியார்கள் . சுந்தரர் அவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் பெயர்க ளேயும் அவர்க்கு முன் வாழ்ந்த நாயன்மார் பெயர்களையும் தாம் பாடிய திருத்தொண்டத்தொகையில் குறிப்பிட் டுள்ளார். 63 நாயன்மார்கள், 9 தொகை அடியார்கள் இங் நூலில் கூறப்பட்டுள்ளனர். இந் நாயன்மார்கள் ஒரு காலத்தவரல்லர், ஒரு சாதியார் அல்லர், ஒரு நாட்டார் அல்லர். வேதியர், ஆதிசைவர், வேளாளர், வணிகர், அர சர், அரசியர், சிற்றரசர், தளபதிகள், அமைச்சர் முதலிய உயர் குடி மக்களும், வண்னர், குயவர், எண்ணெய் விற். பவர் முதலிய கீழ்க் குடி மக்கள் பலரும் அத்தொகையில் இடம் பெற்றனர். அக் காலச் சைவ உலகில் அவரனே வர்க்கும் சமநிலை வழங்கப்பட்டது. உண்மையான பக்தி க்கு மதிப்பே தவிர, தொழிற்கோ செல்வத்திற்கோ உய ரிய பதவிக்கோ மதிப்பில்லை என்பது திருத்தொண்டத் தொகையால் அறியும் உண்மையாகும். இதுவே உண்மை யான சமயப் பண்பாடாகும், சுந்தரர் குருக்கள் மரபினர். அவர் திருவாரூர்க் கோயிலில் பணியாற்றி வந்த கணிகை யர் மரபில் வந்த பரவையாரைக் காதலித்துக் கோயிலிலே திருமணம் செய்து கொண்டார். பின்பு வேளாளர் மரபில் வந்த சங்கலியாரைத் திருவொற்றியூர்க் கோயிலில்மணந்து கொண்டார். இவ்வரலாற்றிலிருந்து பல்லவர் காலத்தில் வாழ்ந்த சைவர்கள் சாதி வேறுபாட்டைக் கருதவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/62&oldid=729987" இலிருந்து மீள்விக்கப்பட்டது