பக்கம்:Saiva Nanneri.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மூவர் தமிழ் 1. திருஞான சம்பந்தர் வரலாறு சோழ நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்ரு ன சிகாழியில் வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்கள் சிவஞானப் பாலுண்ட ஞானசம்பந்தர் தோன்றினர். இவரைப் பெற்றெடுத்த பெருமை சிவபாத இருதயருக்கும் பகவதி என்ற பெண்மணிக்கும் சேரும். குலம் அந்தனர் குலம். இவர் பிறந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு எள், சிவபாத இருதயர் அந்தணர் குலத்து மlை யாகத் தோன்றிய மழவிளங்குழவியுடன் சீகாழித் திரும் குளத்துக்கு நீராடச் சென்ருர். குழந்தையைக் கரையில் வைத்து விட்டு அவர் ரோடிக் கொண்டிருக்குங்கால் குழந்தைக்குப் பசி யெடுத்தது. எனவே குழந்தையின் பூவந்த உண் கண்களிலிருந்து புனல் சொரிந்தது; வாய் ஒலமிட்டது. அந்த ஒலம் பெற்ற தந்தைக்குக் கேட்க வில்லை. ஆனால் உலகெலாம் ஒம்பும் இறைவன் திருச் செவிகளில் சென்று விழுந்தது. அவ்வளவில் அவன் பணிப்ப, அம்மை தன் திருவமுதினே ஞ ா ன த் து ட ன் கலந்து அழுது கிற்கும் அந்த மழலைச் செல்வத்திற்கு ஊட்டினர். தங்தை ரோடி விட்டுக் கரையேறினர். குழந்தையை ஆசையோடு நெருங்கினர். முகத்திலிருந்த புன்னகை மறைந்தது; முகஞ் சிவந்தார். அவர் கைக் குக் கோலொன்று வந்தது. "பாலளித்தவர் யாவர்?’ என்று அவர் சினத்துடன் கேட்கவே, பாலருவாயர் தமது வலக் கையைக் கோயிற்புறமாக நீட்டிச் சுட்டு விரலாற் காட்டி. னர். அங்கே சிவன் உமையுடன் காளைமீது காட்சி கல் கினர். பிள்ளையார் "தோடுடைய செவியன்' எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/64&oldid=729989" இலிருந்து மீள்விக்கப்பட்டது