பக்கம்:Saiva Nanneri.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 போலவும் கவிதை உணர்வு தோன்றிப் பெருகியிருத்தல் வேண்டும். அதிலும் அவையெலாம் இறைவன் படைப்பு. இறைவன் உறையும் இடங்கள் என்ற எண்ணம் சம்பந்த ரைக் களிப்பு வெள்ளத்திலே ஆழ்த்தியிருத்தல் வேண் டும். அவ்வாறு ஆழ்த்தப் பெற்ற சம்பந்தர் தம் கண்ணுக் கும் உள்ளத்துக்கும் களிப்பையும் கடவுள் அருளேயும் ஊட்டிய அக் காட்சிகளை வளஞ்சான்ற கவிதைகளாக்கிப் பாடியுள்ளார். இதனைத் திருப்பூக்தராய்ப் பதிகத்திலே கானலாம். == எற்று தெண்டிரையேறிய சங்கினெ டிப்பிகள் . பொற்றி கழ்கம லப்பழ னம் புகு பூந்தராய்' சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு பொங்கு தெண்டிரை வந்தலைக் கும் புனற் பூந்தராய்' என்பவை சம்பந்தர் தீட்டிய கடற்கரைக் காட்சிகளாகும். A - மருத வளம் நல்கும் இன்பத் திருக்காட்சியை நாம் திருவிழிமிழலைப் பதிகத்திற் காணலாம். இயற்கையன் னேயின் முழு அழகையும் நாம் மருத கிலத்திலே காணலாம். ஒரு காட்சி வருமாறு: - வயல் வளம் பொங்கும் பழனம், ர்ே கிறைந்த கஞ் செய்; சொல்லரும் சூற் பசும் பாம்பு போலக் காய்த்து முற் றிய நெற் கதிர்கள் சான்ருேர் போலத் தலே தாழ்ந்து வரிசை வரிசையாகக் காட்சி நல்குகின்றன. அவற்றி டையே ஒரு சிறு பள்ளம். அந்தப் பள்ளத்திலே குவளேயும் தாமரையும் மயங்கி உள்ளன. அங்கே ஒரு காட்சி. தாம ரைப் பூ நன்கு விரிந்து மணம் கமழ்ந்து கொண்டிருக்கி றது. விரிந்த அம் மனமலரிலே திரண்ட வெண்ணெயின வெல்லும் அரச அன்னம் ஒன்று உட்கார்ந்துளது. அதன் பின்புறம் தாமரை இலை ஒன்று உயர்ந்து அன்னத்தின் மீது கவிழ்ந்து காணப்படுகிறது. மற்ருெருபால் கெற் கதிர்கள் அசைந்தாடுகின்றன. இதனேக் கண்ட ஞானசம் பந்தருக்கு ஒர் இன்பக் கற்பனை அவர்தம் கவிதையுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/74&oldid=730000" இலிருந்து மீள்விக்கப்பட்டது