பக்கம்:Saiva Nanneri.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 f யும் தமக்கு முன் வாழ்ந்த சிவனடியார்கள் சிலரையும் குறித்துப் பாடிப் பெருமைப்படுத்தி உள்ளார். அவரால் அவ்வாறு திருப்பதிகங்களிலே குறிக்கப் பட்ட பெருமை யுடையவர்கள் பன்னிருவராவர். அப்பெரு மக்களுள் எழுவர் திருஞானசம்பந்தரின் காலத்தவர்; ஐவர் அவர்க் குக் காலத்தால் முற்பட்டவர். சிவஞானம் விஞ்சிய ஆளுடைப் பிள்ளே யார் காலத் துக்கு முற்பட்டவருள் சண்டீசர் ஒருவர். இவர் ஆற்று மணலையே சிவலிங்கமாகச் செய்து ஆவின் பாலால் முழுக் காட்டி காளும் அரனே வழிபட்டு வந்தார். அது கேட்ட அவர்தம் தங்தை உளம் கடுத்தார்; காடு வந்தார். ஆற் றிடை இலிங்கமும் அதன் மேற் சொரியும் பாலையும் கண் டார். மிகவும் வெகுண்டார்; தன் காலால் சிவலிங்கத்தைச் சிதைக்க முயன்ருர். அதனேக் கண்ட சண்டீசர் அடிபட்ட அரவானுர், கையிலே கண்ட கோடாரியை எடுத்தார். தங்தைத்ாள் கண்டதுண்டமாகுமாறு வீசினர். பின்னர் இறைவன் தோன்றி அவர் பக்தியைச் சிறப்பித்தார். இத் திருவரலாற்றைச் சம்பந்தர் பின்வருமாறு தம் தெய்வ மணங் கமழும் திருப் பாட்டாற்பாடியுள்ளார். 'வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும் சிங்தை செய்வோன்தன் கருமம் தேர்ந்து சிதைப் # - பான வருமத தங்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக் கொங் தணவு மலர் கொடுத்தான் கோளிலியெம் பெரு - - --- .Lפrr)36סr.** சிவத் தொண்டு செய்த சோழ மன்னர்களுள் காலத் தால் முக்தியவன் சோழன் கோச்செங்கனன் என்பதை முன்னர்க் கண்டோம். அவன் எண்டோளிசற்கு மாடங் கள் எழுபது எழுப்பிய விழுமிய பெருமையுடையவன். அதனைச் -- -- 'செம்பியன் கோச் செங்களுன் செய் கோயில்: என்று சம்பந்தர் குறிக்கிரு.ர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/76&oldid=730002" இலிருந்து மீள்விக்கப்பட்டது