பக்கம்:Saiva Nanneri.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2" சம்பந்தர் கால அடியார்களுள் திருலோக்கர் ஒருவர். இவரது ஊர் திருநள்ளாறு என்ற பெயருடையதாகும். நள்ளாற்றுக்குச் சம்பந்தர் சென்று பதிகம் பாடிய பின் னர் திருலேநக்கர் வீட்டிலேயே தங்கி அருளினர். அத் தகைய பெருமையுடைய திருலேகக்கரைத் தம் திருப்பாலில் கீழ்வருமாறு குறித்துள்ளார். கிறையினர் நீலநக்கன் நெடுமாங்கர் என்று தொண்டர் அறையுமூர் சாத்த மங்கை அயவந்தி மேல் ஆய்ந்த'. அப்பரால் பாடப்பட்ட திருப்பதிகளுள் ஒன்று திருப்புகலூர். இங்கே ஒரு மடம் இருந்தது. அதிலே தான் சம்பந்தர் வந்து தங்கியிருந்தார். இம்மடத்திலே தான் அப்பர் இரண்டாம் முறையாகச் சம்பந்தரைச் சந் தித்து அளவளாவினர். அத்தகைய பெருமையுடைய திருமடத்தினை ஏற்படுத்தியவரே திருமுருக நாயனர் என் பவர். அவரைச் சம்பந்தர், - "தொண்டர் தண்கய மூழ்கித் துணையலும் i- சாந்தமும் புகையும் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி s முருகன் செய்கோலம்' என்று பாடிச் சிறப்பித்துள்ளார். நரசிம்மப் பல்லவனுக்குத் தண்டாக வாதாபிமேற் படையுடன் சென்று சாளுக்கியப் புலிகேசன வென்றவர்: வாதாபி நகரைத் திக்கிரையாக்கியவர்: வெற்றித் த்ானே கிலே நாட்டியவர்: சம்பந்தர் காலத்தை வரையறுக்கப் பெரிதும் உதவியவர்: தமிழகத்திலே முதன் முதலாக விநாயக வணக்கத்தை ஏற்படுத்தியவர் என்றெல்லாம் புக முப்படுகின்றவர் சிறுத்தொண்ட காயரைாவார். இவரது இயற்பெயர் பரஞ்சோதியார். இவர் தங்கி வாழ்ந்த ஊர் திருச்செங்காட்டங்குடியாகும். இது சம்பந்தரால் பாடப் பட்ட பெருமையுட்ையது. இவர் இங்கு வருமாறு வருக்தி அழைத்த பெருமை சிறுத்தொண்டரையே சேரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/78&oldid=730004" இலிருந்து மீள்விக்கப்பட்டது